தன்னுடைய சினிமா வரலாற்றிலேயே இது தான் முதல் முறையாக இப்படி பண்றேன் - "இந்தியன் 2" குறித்து காஜல் அகர்வால்..!


கடந்த ஆண்டு காஜல் அகர்வால் மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரும் நடித்திருந்த ‘கோமாளி’ திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தின் தமிழ் ரீமேக் ஆன ‘குயின்’ படத்தில் தற்போது காஜல் நடித்து வருகிறார்.

இந்தப் படம் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு பல மாதங்களாகிவிட்டன. ஆனாலும் இன்னும் இப்படத்தின் வேலைகள் முடிவடையவில்லை. இதனிடையே கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தில் இவர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் காஜல் அகர்வால், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது அவர் ‘இந்தியன்2’ படம் பற்றி சில விவரங்களை கூறினார். ஆனால் அதிகம் அதை குறித்து பேசுவதை அவர் தவிர்த்தார். கொரோனா ஊரடங்கு முடிந்ததும் நடைபெற உள்ள ‘இந்தியன்2’ படப்பிடிப்பிற்காக அவர் தயாராகி வருவதாக கூறியுள்ளார்.

மேலும், என் கதாபாத்திரம் மறக்க முடியாத அளவுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று அவர் உறுதி அளித்துள்ளார். ‘இந்தியன்’ திரைப்படம் 1996 ஆம் ஆண்டு வெளியானது. அதனை ஷங்கர் இயக்கி இருந்தார். அதில் சுகன்யா, மனிஷா கொய்ராலா, கஸ்தூரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்க வுள்ளார் என்றும் செயற்கையான தோல்கள் இவருக்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ளன எனவும் இதற்க்கான மேக்கப் நேரம் மட்டும் 4 மணி நேரம் ஆகும் எனவும் மேக்கப்-பை கலைக்க 1 மணி நேரம் ஆகும் எனவும் கூறுகிறார்கள்.

தன்னுடைய சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக மேக்கப்பிற்கு மட்டும் இத்தனை மணி நேரம் செலவிடப்போகிறேன் என்கிறார் காஜல் அகர்வால்.

தன்னுடைய சினிமா வரலாற்றிலேயே இது தான் முதல் முறையாக இப்படி பண்றேன் - "இந்தியன் 2" குறித்து காஜல் அகர்வால்..! தன்னுடைய சினிமா வரலாற்றிலேயே இது தான் முதல் முறையாக இப்படி பண்றேன்  - "இந்தியன் 2" குறித்து காஜல் அகர்வால்..! Reviewed by Tamizhakam on June 11, 2020 Rating: 5
Powered by Blogger.