நான்கு வருட காதல் - "கும்கி" அஸ்வின் ராஜாவிற்கு 24ம் தேதி திருமணம் - பொண்ணு யாருன்னு பாருங்க..!


தமிழில் பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் அஸ்வின் ராஜ். இவர் பிரபல சினிமா தயாரிப்பாளர் வி.சுவாமிநாதனின் மகன் ஆவார். கடந்த 2010-ம் ஆண்டு சினிமாவில் அடியெடுத்து வைத்த இவர் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

"கும்கி" படத்தில் தம்பி ராமையாவுடன் இவர் செய்யும் குத்தல் காமெடி காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது. மேலும், எத்தன், வந்தான் வென்றான், முப்பொழுதும் உன் கற்பனைகள் உட்பட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளா. கடைசியாக தனசு ராசி நேயர்களே என்ற படத்தில் நடித்தார்.

இவர் கடந்த நான்கு வருடங்களாக வித்யாஶ்ரீ என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்தது. வித்யாஶ்ரீ, சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் மகள். அமெரிக்காவில் படித்து முடித்துள்ளார்.

இவர்கள் திருமணம் வரும் 24 ஆம் தேதி சூளைமேட்டில் உள்ள அஸ்வின் வீட்டில் நடக்க இருக்கிறது. கொரோனா லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்த திருமணத்தில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளனர். 'இது நான்கு வருட காதல். வீட்டில் காதலுக்கு ஒப்புக்கொண்டனர். லாக்டவுன் காரணமாக திருமணத்தை எளிமையாக நடத்துகிறோம்' என்று கூறியுள்ளார் கும்கி அஸ்வின்.

நான்கு வருட காதல் - "கும்கி" அஸ்வின் ராஜாவிற்கு 24ம் தேதி திருமணம் - பொண்ணு யாருன்னு பாருங்க..! நான்கு வருட காதல் - "கும்கி" அஸ்வின் ராஜாவிற்கு 24ம் தேதி திருமணம் - பொண்ணு யாருன்னு பாருங்க..! Reviewed by Tamizhakam on June 19, 2020 Rating: 5
Powered by Blogger.