32 வயதில் இரண்டாவது திருமணம் செய்யும் நடிகை ஆரத்தி கணேஷ்..! - இவரு தான் மாப்பிள்ளை..! - வைரலாகும் புகைப்படம்.!


பிரபல காமெடி நடிகை ஆர்த்தி, ஒரு ஆணின் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இவரை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவித்து, கணவருக்கே அதை டேக் செய்துள்ளார்.

இந்த அதிர்ச்சிக்கு பின்னால் ஒரு ட்விஸ்டும் உள்ளது, வாங்க என்னனு தெரிச்சுக்கலாம். முன்னணி நடிகர்கள் நடித்த, திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆர்த்தி கணேஷ்.

இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு, காமெடி நடிகர் கணேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.திருமணம் ஆகி 10 வருடங்களுக்கு மேல் ஆகியும், தற்போது வரை இளம் ஜோடிகளாக வலம் வருகிறார்கள்.

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு விளையாடினார். இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஜூலியை பிடிக்காது, அதே போல் தன்னுடைய கோவத்தை ஓவியா மீதும் காட்டியதால், குறைவான வாக்குகளை பெற்று இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

தற்போது தன்னுடைய கணவர் மற்றும் தந்தையோடு வசித்து வரும் ஆர்த்தி, சமூக வளைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில், சமீபத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் பேஸ் ஆப்-பை பயன்படுத்தி தன்னுடைய முகத்தை ஆண் போல மாற்றி இவரை தான் நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று கூறி அவரது கணவரை டேக் செய்து ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளார்.


32 வயதில் இரண்டாவது திருமணம் செய்யும் நடிகை ஆரத்தி கணேஷ்..! - இவரு தான் மாப்பிள்ளை..! - வைரலாகும் புகைப்படம்.! 32 வயதில் இரண்டாவது திருமணம் செய்யும் நடிகை ஆரத்தி கணேஷ்..! - இவரு தான் மாப்பிள்ளை..! - வைரலாகும் புகைப்படம்.! Reviewed by Tamizhakam on June 22, 2020 Rating: 5
Powered by Blogger.