விஜய்யின் 66-வது படத்தை நேரடியாக தயாரிக்கும் இலுமினாட்டிகள்..! - என்ன நடக்குது..? - பரபரப்பு தகவல்கள்..!


'தளபதி 65' படத்தின் வெளியீட்டை இப்போதே முடிவு செய்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாஸ்டர்'. விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகன், கெளரி கிஷண், வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் லலித் வாங்கியுள்ளார். தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்து, ஏப்ரல் 9-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு.

இதற்காக பணிகள் அனைத்தும் படுதீவிரமாக நடைபெற்று வருகிறது. இது விஜய் நடிப்பில் உருவாகும் 64-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் 65-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சுதா கொங்காரா அல்லது பாண்டிராஜ் இருவரில் ஒருவர்தான் இயக்குநராக இருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதே வேளையில், இந்த படத்தை முருகதாஸ் இயக்குகிறார் என்றும் துப்பாக்கி 2-வாக அந்த படம் இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்தப் படத்தை 2021-ல் பொங்கல் பண்டிகைக்கு வெளியிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளது சன் பிக்சர்ஸ்.

ஆனால், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும். படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என எதுவுமே தெரியாமல் இருப்பதால் விஜய்யின் அடுத்த படம் அடுத்த பொங்கலுக்கு வெளியாக வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில், விஜய்யின் 66-வது படத்தை தயாரிக்க பிரபல நிறுவனம் ஒன்று துண்டு போட்டு ரிசர்வேஷன் செய்துள்ளது. ஆம், பிக்பாஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்சிகளை தயாரிக்கும் நிறுவனமான என்டமோல் ஷைன் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியே ஒரு இலுமினாட்டிகளின் வேலை எனவும் ரகசிய சமூகமாக இருக்கும் ஒரு சிலர் தான் என்டமோல் ஷைன் போன்ற நிறுவனங்கள் மூலம் பிக்பாஸ் போன்ற நிகழ்சிகளை நடத்துகிறார்கள் எனவும் நாட்டில் அவர்கள் அடுத்த என்ன செய்யப்போகிறார்களோ அதை முன் கூட்டியே அந்த நிகழ்ச்சி மூலம் கூறி விடுகிறார்கள் எனவும் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

மேலும், பிகில் படத்தின் நடிகர் விஜய் இலுமினாட்டிகளின் அடையாளம் என்று கூறப்படும் முக்கோணம் மற்றும் ஒற்றைக்கண் கொண்ட ஒரு சின்னத்தை பிரிண்ட் செய்த ஒரு டீசர்ட்டை போட்டுக்கொண்டு ஆடினார்.


இந்நிலையில், இப்போது தளபதி66 படத்தை நேரடியாக என்டமோல் ஷைன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்ற தகவல் பொதுவான ரசிகர்கள் மத்தியில் ஒரு வித பரபரப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் 66-வது படத்தை நேரடியாக தயாரிக்கும் இலுமினாட்டிகள்..! - என்ன நடக்குது..? - பரபரப்பு தகவல்கள்..! விஜய்யின் 66-வது படத்தை நேரடியாக தயாரிக்கும் இலுமினாட்டிகள்..! - என்ன நடக்குது..? - பரபரப்பு தகவல்கள்..! Reviewed by Tamizhakam on June 04, 2020 Rating: 5
Powered by Blogger.