தமிழில் 2009-ல் வெளிவந்த சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை அனுயா பக்வத். அந்த பட வெற்றியை தொடர்ந்து மதுரை சம்பவம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமாகியிருந்தார்.

பட வாய்ப்பு கூட கூட அம்மணியின் உடல் எடையும் கூடிக்கொண்டே சென்றதால் சிக்கென இருந்த இவர் உடல் பெருத்து குண்டாகி போனார். இதனால் பட வாய்ப்புகளை இழந்தார்.

பட வாய்ப்பு தேடி பல வழிகளில் முயற்சி செய்தும் பயனில்லை. இதனை, தொடர்ந்து சின்னத்திரை பக்கம் எட்டிப்பார்த்தார். டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு முதல் ஆளாக வெளியேறினார். இதற்கிடையில், சுச்சி லீக்ஸ் சர்ச்சையில் சிக்கினார். அதில் சிக்கிய நடிகைகள், அது நான் இல்லை என்று ஸ்டேட்மென்ட் விட்டுக்கொண்டிருந்த நிலையில் அது நான் தான் எனவும் அதனை கலை கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என்று தில்லாக கூறியிருந்தார் அம்மணி.

சமீப காலமாக, ஹிந்தி சீரியல்கள், வெப் சீரிஸ்கள் போன்றவற்றில் பிஸியாக இருக்கும் இவர், அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.


அந்த வகையில், தற்போது வைரம் போல மின்னுகிறேன் என்று கூறு இருட்டு அறையில் கருப்பு கவர்ச்சி உடையில் தன்னுடைய அழகு பளீச்சென தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.