ஆடிய ஆட்டம் என்ன..? - கொஞ்சம் வளர்ந்ததும் வேலையை காட்டிய நடிகை..! ஓரம் கட்டிய திரையுலகம்..!


தமிழ் சினிமாவில் வந்த வேகத்திலேயே கிடுகிடுவென தங்கம் விலையை போல் முன்னணி ஹீரோயினாக வளர்ந்தார் அந்த பப்ளிமாஸ் நடிகை. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளிலும் தற்போதைக்கு டாப் ஹீரோயின் அவர்தான்.

ஆனால், அறிமுகமான காலத்தில் வந்த பட வாய்ப்புகள் போல சமீபகாலமாக அஎதுவும் வருவதில்லை. கமர்சியல் படங்களில் நடித்து கல்லா கட்டிக்கொண்டிருந்த அந்த நாயகி திடீரென கதையின் நாயகியாக உருவெடுத்து அதிலும் வெற்றி பெற்றார்.

இதுதான் சாக்கு என தொடர்ந்து ஹீரோயின் சென்ட்ரிக் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதேசமயம் பாலிவுட்டிலும் ஒரு ஆஃபர் வந்தது. பாலிவுட் நடிகைகள் என்றால் ஒல்லியாக இருக்கிறார்கள். அதனால், நானும் உடல் எடை குறைத்து ஒல்லியாகிறேன் என்று கூறி எழும்பும் தோலுமான மாறிவிட்டார் அம்மணி.

கொழுகொழு கொளுகட்டை போல இருக்கும் போது புக் செய்த பாலிவுட் ஆசாமிகள், உடல் எடையை குறைத்ததும் செல்லாது.. செல்லாது என்று செல்லா காசாய் தூக்கி வீசி விட்டார்கள்.

இதனால் அந்த நாயகி கடும் அப்செட். மேற்கொண்டு பாலிவுட் ஆசையில் பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் வாய்ப்புகளையும் உதறித் தள்ளினார். அதுமட்டுமில்லாமல் பாலிவுட் போகிறேன் என அந்த நடிகை பண்ணிய பந்தா கொஞ்ச நஞ்சம் இல்லையாம்.

என்னமோ இந்த திரையுலகமே அவரது காலடியில் இருப்பதை போல தயாரிப்பாளர்களையும், இயக்குனர்களையும் சுத்தமாக மதிக்கவே இல்லையாம். சம்பள விஷயத்தில் முன்னாடி இருந்த அமைதி இப்போது இல்லையாம். கேக்குறத கொடுத்தா நடிக்கிறேன், இல்லேன்னா வந்த வழியே பார்த்துட்டு கிளம்புங்க என சொல்லி பகுமானம் காட்டியுள்ளார் அம்மணி.

எந்த துறையாக இருந்தாலும், எவ்வளவு வளர்ந்தாலும் பணிவு மிக மிக அவசியம். ஆதகப்பட்ட எம்.ஜி.ஆரே இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் முன்பு கைகட்டி தான் பேசுவார். அதனை, இன்றைக்கும் ரஜினி, விஜய், அஜித் போன்ற உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் கடை பிடித்து வருகிறார்கள். தயாரிப்பாளர், இயக்குனர் சொல்வதை கேட்டு வேலை செய்யும் வேலையாள் தான் நான். தவிர பெரிய ஹீரோ எல்லாம் கிடையாது என்று அமைதியாக சொல்வார்கள்.

இந்த பண்பு இல்லாத எத்தனையோ நடிகர்கள் மக்கள் மத்தியில் நற்பெயர் இருந்தும் சினிமாவில் இருந்து காணாமல் போயிருக்கிறார்கள். அவர்கள் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார் இந்த நடிகை.

அறிமுகமான புதிதில் பம்மிக்கொண்டிருந்த இந்த அமைதியான புள்ளையா இப்படி மாறிருச்சு என கவலையில் தயாரிப்பாளர்கள் அந்த நடிகையை எந்த ஒரு படத்திலும் கமிட் செய்யவில்லையாம். தயாரிப்பாளர்களின் வயிற்றெரிச்சல் சும்மா விடுமா, பாலிவுட் செல்ல இருந்த நடிகையை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். பழையபடி எதிர்பார்த்த பட வாய்ப்புகளும் இல்லை.

அன்று ரொம்ப ஓவராக பண்ணியதால் தற்போது யாரிடமும் பட வாய்ப்பு கேட்க முடியாத சங்கடத்தில் இருக்கிறாராம் அந்த நாயகி. இந்த நிலையில் தான் அந்த நாயகி நடித்த படம் ஒன்று விரைவில் வெளிவர இருக்கிறது. எப்படியும் இனி சினிமா வாய்ப்புகள் பெரிய அளவில் கிடைக்காது என நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாநாயகிகளை தேர்ந்தெடுத்து வருகிறாராம்.

படத்தின் பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கு சம்பளமாக கேட்பதால் விழிபிதுங்கி உள்ளார்கள் தயாரிப்பாளர்கள். நடிகையின் கேரியர் ஸ்வாஹா தான் என்கிறது சினிமா வட்டாரம்.

ஆடிய ஆட்டம் என்ன..? - கொஞ்சம் வளர்ந்ததும் வேலையை காட்டிய நடிகை..! ஓரம் கட்டிய திரையுலகம்..! ஆடிய ஆட்டம் என்ன..? - கொஞ்சம் வளர்ந்ததும் வேலையை காட்டிய நடிகை..! ஓரம் கட்டிய திரையுலகம்..! Reviewed by Tamizhakam on June 12, 2020 Rating: 5
Powered by Blogger.