டாப் ஆங்கிளில் செல்ஃபி எடுத்து போட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை லக்ஷ்மி மேனன்..! - வைரலாகும் புகைப்படம்..!
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான சசிகுமார் நடிப்பில் வெளிவந்த சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் லட்சுமிமேனன். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்.
மேலும் இவர் நடித்த முதல் படமான சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தில் சிறந்த நடிகை என்ற விருதைப் பெற்றுள்ளார். அதன்பிறகு பிரபுசாலமனின் திரைப்படமான கும்கி திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் பிறகாக அவருடைய ரேஞ்சே மாறிவிட்டது. மேலும் இந்த திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
இவை தவிர இவர் நடிப்பில் வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் குட்டிப்பலி, மஞ்சப்பை, சிப்பி, பாண்டிய நாடு, வசந்தகுமாரன், நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, சிப்பாய், கொம்பன், ரெக்க ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
நமது அம்மணி நடிப்பது மட்டுமல்லாமல் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா என்ற திரைப்படத்தில் “குக்குரு குக்குரு” என்ற பாடலையும் பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான தல அஜித் நடித்து வெளிவந்த வேதாளம் என்ற திரைப்படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடித்துள்ளார்.
இவ்வாறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நமது அம்மணி தனது மார்க்கெட் தற்போது சரிவு நிலையில் உள்ளது. இதனால் கொஞ்ச நாளாக சினிமாவில் பக்கம் ஆளையே பார்க்க முடியவில்லை. இதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் அம்மணிக்கு உடல் எடை கூடிவிட்டது என்று அரசல் புரசலாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும் தற்போது ஆண்ட்டி மாறி காட்சியளிப்பதால் இயக்குனர்கள் அவரை தேர்வு செய்வதற்காக யோசிக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் அம்மணி இப்போது படிப்பில் மிகவும் ஆர்வமாக உள்ளாராம்.
ஆகையால் அவர் படிப்பு பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்தால் சினிமாவிலிருந்து தற்போது கொஞ்சம் விலகி இருக்காராம். இந்த நிலையில் தற்போது அம்மணிக்கு மீண்டும் விக்ரம் பிரபுவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும்.
மறுபடியும் சினிமாவில் குதிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், டாப் ஆங்கிளில் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார் அம்மணி.
உடல் எடையை கணிசமாக குறைத்து சிக்கென மாறியுள்ளார் லக்ஷ்மி மேனன். இதனை பார்த்த ரசிகர்கள் பொசு பொசுவென இருந்த லக்ஷ்மி மேனனா இது..? என்று விழி பிதுங்கிதான் போயுள்ளனர்.
டாப் ஆங்கிளில் செல்ஃபி எடுத்து போட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை லக்ஷ்மி மேனன்..! - வைரலாகும் புகைப்படம்..!
Reviewed by Tamizhakam
on
June 11, 2020
Rating:
