அச்சச்சோ..! - புத்தம் புதிய கியா கார்னிவல் கார் - டெலிவரி எடுத்த அடுத்த நிமிடம் நடந்த சோகம் - வைரலாகும் வீடியோ..!


கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கியா கார்னிவல் கார்-ஐ டெலிவரி எடுத்த அடுத்த நிமிடமே கார் விபத்துக்குள்ளான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புத்தம் புதிய கியா கார்னிவல் கார் சுவரில் மோதும் காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வாடிக்கையாளர் ஒருவர் தனது புதிய கார்னிவல் காரை விற்பனை மையத்தில் இருந்து வீட்டுக்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் போது எடுக்கப்பட்டதாகும்.

கார் சுவரில் மோதும் முன், விற்பனை மைய ஊழியர் புதிய கார் விவரங்களை வாடிக்கையாளருக்கு விவரிக்கிறார். பின் வாடிக்கையாளர் கார் அக்சிலரேட்டரை மெதுவாக அழுத்தி காரை வெளியே கொண்டு வருகிறார். ஆனால், காரை திருப்பாமல் நேராக சென்று முன்னே இருந்த சுவற்றின் மீது டமால் என மோதி நிறுத்துகிறார்.

ப்ரேக்கிற்கு பதிலாக ஆக்சிலரேட்டரை அவர் மிதித்திருக்கலாம் எனவும் இது கவனமின்மையால் ஏற்பட்ட விபத்து. ஷோரூமிலேயே விபத்து நேரந்தது அவர் செய்த புண்ணியம் என்று தான் நினைக்கிறோம் என்கிறார்கள் ஷோ ரூம் உரிமையாளர்கள்.

கியா கார்னிவல் புத்தம் புதிய கார் சுவரில் மோதிய உடனே காரில் உள்ள ஏர்பேக்குகள் செயல்பட்டதால் தீவிரமான பாதிப்பு ஏற்படவில்லை என்றே தெரிகிறது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் அருகில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

மோதலில் காரின் முன்புற பொனெட், பம்ப்பர் மற்றும் பக்கவாட்டுகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்துடன் காரில் உள்ள கூலண்ட் அல்லது தண்ணீர் கசிந்திருக்கிறது. சேதமடைந்த காரின் உள்புற பாகங்களும் மாற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இப்படி புதிய கார் வாங்கி கவன குறைவாலோ, சந்தோஷ மிகுதியாலோ அல்லது பதட்டத்தினாலோ பலர் ப்ரேக் பெடலுக்கு பதிலாக ஆக்சிலரேட்டர் பெடலை மிதித்து விடுகிறார்கள். இதனை தவிர்க்க நன்கு பயிற்சி எடுத்த பிறகே வாகனத்தை வாங்க வேண்டும்.

அப்படியே வாங்கினாலும் வண்டி பழக்கப்படும் வரை மிதமான வேகத்தில் பயணிப்பது பர்ஸையும், உயிரையும் பாதுக்காக்கும். இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் பதிவு செய்யுங்கள்.

இதோ அந்த வீடியோ,


அச்சச்சோ..! - புத்தம் புதிய கியா கார்னிவல் கார் - டெலிவரி எடுத்த அடுத்த நிமிடம் நடந்த சோகம் - வைரலாகும் வீடியோ..! அச்சச்சோ..! - புத்தம் புதிய கியா கார்னிவல் கார் - டெலிவரி எடுத்த அடுத்த நிமிடம் நடந்த சோகம் - வைரலாகும் வீடியோ..! Reviewed by Tamizhakam on June 23, 2020 Rating: 5
Powered by Blogger.