நெடுஞ்சாலை பட நடிகை ஷிவதா என்ன ஆனார்..? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! - வைரலாகும் புகைப்படங்கள்..!


தமிழில் 'நெடுஞ்சாலை’ படத்தின் மூலம், தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை ஷிவதா. மேலும் ’அதே கண்கள்’, ஸிரோ, ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

திருமணத்திற்கு பிறகும், தொடர்ந்து கதாநாயகியாகவே நடித்து வருகிறார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முரளிகிருஷ்ணன் என்பவரை காதலித்து, திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், கடந்த வருடம் கர்ப்பமானதால், திரையுலகை விட்டு சற்று ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை 20ஆம் தேதி, இவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

இந்த செய்தியை, தற்போது தான் அவர் ரசிகர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். இவருக்கு குழந்தை பிறந்த விஷயம் அறிந்து, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஷிவதாவின் பெண் குழந்தைக்கு ‘அருந்ததி’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. என்பதையும் அறிவித்துள்ளார். மேலும், நடிகை ஷிவதா நடிப்பில் 'வல்லவனுக்கு வல்லவன்’, எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் இரவைக்காலம் ஆகிய இரண்டு படங்கள் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், இந்த நாளை நீங்கள் மீண்டும் பெற போவதில்லை. எனவே, இந்த நாளை இன்றே கொண்டாடுங்கள். மகிழ்ச்சியாக வாழுங்கள். என்று கூறி தன்னுடைய தற்போதைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


நெடுஞ்சாலை பட நடிகை ஷிவதா என்ன ஆனார்..? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! - வைரலாகும் புகைப்படங்கள்..! நெடுஞ்சாலை பட நடிகை ஷிவதா என்ன ஆனார்..? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! - வைரலாகும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on June 24, 2020 Rating: 5
Powered by Blogger.