கதறியபடியே சுஷாந்தின் அஸ்தியை புனித கங்கையில் கரைத்த குடும்பத்தினர் - நெஞ்சை பிழியும் வீடியோ..!


மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அஸ்தி, அவரது சொந்த ஊரான பாட்னாவில், புனித கங்கை நதியில் கரைக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சுஷாந்த் மும்பையில் தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

மும்பையில் அவர் உடல் தகனம் செய்யப்பட்டு, அவரது சொந்த ஊரான பிஹார் மாநிலத்தின் பாட்னாவுக்கு அஸ்தி கொண்டுவரப்பட்டது. சுஷாந்தின் தந்தை, இரண்டு சகோதரிகள் ஆகியோர் வேத பண்டிதர்கள் முன்னிலையில் பாட்னாவில், திகாகாட் என்ற இடத்தின் வழியாக ஓடும் கங்கை நதியில் சுஷாந்தின் அஸ்தியை, படகில் சென்று கரைத்தனர்.

இதே இடத்தில்தான் அவரது அம்மாவின் அஸ்தியும் கரைக்கப்பட்டது என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 34 வயதான இளம் நடிகர் சுஷாந்தின் மரணம் தேசிய அளவில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களும், அரசியல் தலைவர்கள் சிலரும், சுஷாந்தின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் சுஷாந்த் நடித்திருக்கும் கடைசி படமான 'தில் பெச்சாரா', ஓடிடி தளங்களில் வெளியாகக் கூடாது, திரையரங்கில்தான் வெளியாக வேண்டும் என்றும் அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


கதறியபடியே சுஷாந்தின் அஸ்தியை புனித கங்கையில் கரைத்த குடும்பத்தினர் - நெஞ்சை பிழியும் வீடியோ..! கதறியபடியே சுஷாந்தின் அஸ்தியை புனித கங்கையில் கரைத்த குடும்பத்தினர் - நெஞ்சை பிழியும் வீடியோ..! Reviewed by Tamizhakam on June 18, 2020 Rating: 5
Powered by Blogger.