ஏமாற்றிய காதலன் - விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட இளம் சீரியல் நடிகை..! - பகீர் தகவல்..!


லட்சங்களில், கோடிகளில் சம்பளம் வாங்கும் திரையுலகினர் சிலர் வாழ்கையை வாழாமல் காதல் தோல்வி, கணவன் மனைவி சண்டை என சிறு சிறு காரணங்களுக்காக தங்களது உயிரை மாய்த்துக்கொள்வதை சமீப காலமாக அடிக்கடி பார்த்து வருகிறோம்.

அந்த வகையில், கன்னட திரையுலக சீரியலில் நடித்து வருபவர் நடிகை சந்தனா என்பவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சந்தனா பல கன்னட சீரியல்களில் நடித்து வந்துள்ளார்.

இவர் தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதன்பின் இவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் மருத்துவ பலனின்றி மரணமடைந்துள்ளார் சந்தனா. மேலும் தான் தற்கொலை செய்யும் முன்பு, தனது தற்கொலை வீடியோவை பதிவு செய்துள்ளார்.

அதில் நடிகை சந்தனா " நான் தினேஷ் எனும் நபரை 5 வருடங்களாக காதலித்து வந்தேன். என்னுடைய தற்கொலைக்கு காரணம் அவர் தான் என்று கூறியுள்ளார் சந்தனா. இது தொடர்பாக காவல் துறை மேற்கொண்ட விசாரணையில். நடிகை சந்தனா தினேஷிற்கு ரூ.5 லட்சம் வரை பணம் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் நடிகை சந்தனாவை திருமணம் செய்து கொள்ளகிறேன் என கூறிவிட்டு, பின் திருமணம் செய்து கொள்ளாமல் தினேஷ் ஏமாற்றி விட்டதாகவும். அதன்பின் தினேஷ் என்பவர் நடிகை சந்தனாவின் பணத்தின் மீது தான் ஆசை வைத்திருந்தாகவும் தெரியவந்துள்ளது.இதனால் தன்னை திருமணம் செய்துகொள்ளாமல் தினேஷ் ஏமாற்றி விட்டதால் மனமுடைந்து போய் தற்கொலை செய்துகொண்டுள்ளார் நடிகை சந்தனா. மேலும் சந்தனா தற்கொலை செய்துகொண்டதற்கு பின் தினேஷ் தலைமறைவாகி விட்டாராம். தற்போது அவரை போலிசார் வலை வீசி தேடி வருவதாக கூறுகின்றனர்.

ஏமாற்றிய காதலன் - விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட இளம் சீரியல் நடிகை..! - பகீர் தகவல்..! ஏமாற்றிய காதலன் - விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட இளம் சீரியல் நடிகை..! - பகீர் தகவல்..! Reviewed by Tamizhakam on June 03, 2020 Rating: 5
Powered by Blogger.