வரம்பு மீறிய காட்சிகள் - இந்திய ராணுவத்தை இதை விட எவராலும் இழிவு படுத்த முடியாது..! - கடும் கோபத்தில் ரசிகர்கள்..!


சமீப காலமாக வெப் சீரிஸ்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றன. இதில், படத்தை தயாரிப்பவர்களுக்கு என்ன ப்ளஸ் பாய்ன்ட் என்றால், சென்சார் என்ற விசயமே இல்லை. இதனால், கண்ட மேனிக்கு காட்சிகளை வைக்கிறார்கள்.

அதிலும், நடிகைகளை கெட்ட வார்த்தைகளை பேச வைத்து வெப் சீரிஸ்களுக்கு விளம்பரம் தேடுகிறார்கள். ஆனால், அப்படியான வெப் சீரிஸில் ஒரு மண்ணும் இருக்காது.

வெறுமனே நான்கு இடத்தில் கெட்ட வார்த்தையில் திட்டுவது, சம்பந்தமே இல்லாத ரொமான்ஸ் காட்சிகள் என எக்குதப்பாக கிளம்புகிறார்கள். ஆனால், தற்போது ஒரு படி மேலே சென்று மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக படம் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த வகையில், சமீபத்தில் காட் மேன் என்ற வெப் சீரிஸ் டீசர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக பாஜக-வின் தீவிர முயற்சியால் அந்த படத்திற்கு நீதி மன்றம் மூலம் தடை வாங்கப்பட்டுவிட்டது.

இந்த சர்ச்சை முடிவதற்குள் தற்போது ALT Balaji என்ற நிறுவனம் தயாரித்த வெப் சீரிஸில் இந்தியா ராணுவ வீரர்களை மிகவும் கீழ்த்தரமாக பிரதிபலிக்கும் வகையில் காட்சிக்க இடம் பெற்றிருகின்றன.இதனை கண்டித்தும், எதிர்த்தும் இணைய வாசிகள் #ALTBalaji_Insults_Army என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.


இப்படி இந்திய காலச்சாரமான இந்து மதம் மற்றும் இந்திய ராணுவம் ஆகியவற்றையெல்லாம் சீண்டி படம் எடுக்கும் அளவுக்கு தைரியத்தை இவர்களுக்கு கொடுப்பது யார்...? அவர்களை அடையாளம் கண்டு வெளுத்து கட்டினால் மட்டுமே இது போன்ற தயாரிப்பு நிறுவனங்களையும், இயக்குனர்களையும் ஒழித்து கட்டமுடியும் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

வரம்பு மீறிய காட்சிகள் - இந்திய ராணுவத்தை இதை விட எவராலும் இழிவு படுத்த முடியாது..! - கடும் கோபத்தில் ரசிகர்கள்..! வரம்பு மீறிய காட்சிகள் - இந்திய ராணுவத்தை இதை விட எவராலும் இழிவு படுத்த முடியாது..! - கடும் கோபத்தில் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 02, 2020 Rating: 5
Powered by Blogger.