முன்னாள் காதலி வைத்த ஆப்பு..! - நடன நடிகரிடமிருந்து கழுவுற மீனில் நழுவுற மீனாக எஸ்கேப் ஆன நடிகை..! -
ஆத்தாடி.. பேய் இவ்வளவு அழகா இருக்குமா..? என்று கேட்கும் அளவுக்கு பேய் படத்தில் பேயாக அறிமுகமானவர் அந்த கொளுக் மொளுக் வெள்ளை நடிகை. முதல் படத்திலேயே இள வட்டங்கள் மனதில் சேர் போட்டு அமர்ந்தார்.
தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர போகிறார் என்றார்கள். ஆனால், அப்படி நடக்கவில்லை. முன்னணி நாயகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு அம்மணிக்கு மார்கெட் வளரவில்லை. இதனால், இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வந்தார்.
இந்த சீனுக்கு இவ்வளவு கவர்ச்சி தேவையா..? என்று கேட்கும் நடிகைகள் மத்தியில், இந்த கவர்ச்சி போதுமா..? இல்ல, இன்னும் கொஞ்சம் வேணுமா..? என்று இயக்குனர்களை மகிழ்வித்து மகிழ்ந்தவர் அம்மணி.
பொதுவாக, குட்டியான உடைகளை கொண்டு வந்து கொடுத்தால் இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்தால் கம்ஃபோர்டா இருக்கும் என கேட்கும் நடிகைகள் பார்த்து பழகிப்போன இயக்குனர்களுக்கு கர்சீப்பை கொடுத்தால் கூட கட்டிக்கொண்டு நடிக்க தயார் என்று கூறிய இந்த நடிகைக்கு பட வாய்புகள் குவிந்தன.
அதனால், படத்திற்கு தேவையே இல்லை என்றாலும் அம்மணியின் ஒத்துழைப்பை விணாடிக்க விரும்பாமல் வம்படியாக சில காட்சிகளை சொருகி அம்மணியின் அழகை காட்டினார்கள் கேமராமேன்கள்.
இப்படி, இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் ஃப்ரண்ட்லியாக இருந்த நடிகை இந்த காதல், கசமுசா சமாச்சாரங்களில் சிக்காமல் ஒதுங்கியே இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால், ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது போல நடன நடிகர் ஒருவருடன் இணக்கமாக இருந்தார் அம்மணி. இத்தனைக்கும் , அந்த நடிகருடன் ஒரே ஒரு படத்தில் தான் நடித்துள்ளார்.
ஆரம்பத்தின் நடன நடிகரின் வண்டவாளங்கள் பற்றி தெரியாத அம்மணி அவருக்கு அளவுக்கு அதிகமாவே இடம் கொடுத்து விட்டார். சமீபத்தில், இந்த லாக்டவுன் நேரத்தில் தான் அந்த நடிகரை பற்றி தெரியவர கழுவுற மீனில் நழுவுற மீனாக நடனத்திடம் இருந்து நழுவியுள்ளார்.
எப்படி திடீரென இவருக்கு இந்த ஞானம் வந்தது என்று பார்த்தால் அதற்கு எல்லாம் காரணம் பெரிய நம்பர் நடிகை தானாம். தன்னை போல யாரும் ஏமாந்து விட கூடாது என்பதில் குறியாக இருக்கிறாராம் அம்மணி.
தனக்காக மனைவியை பிரிந்து வந்தவர், தன்னை விட்டு பிரியும் போது சில பல கோடிகளை இழந்தாராம் அம்மணி. இதனை, அப்படி அந்த பேய் நடிகையிடம் ஒப்பித்து விட்டாராம் அம்மணி. இது தான் இந்த நடிகைக்கு திடீர் ஞானம் வர காரணம் என்கிறார்கள்.
முன்னாள் காதலி வைத்த ஆப்பு..! - நடன நடிகரிடமிருந்து கழுவுற மீனில் நழுவுற மீனாக எஸ்கேப் ஆன நடிகை..! -
Reviewed by Tamizhakam
on
June 20, 2020
Rating:
