"உங்களுக்கு வயசே ஆகல மேடம்..." - புன்னகையரசி வெளியிட்ட முரட்டுத்தனமான புகைப்படம்..! - உருகும் ரசிகர்கள்..!


குடும்ப குத்துவிளக்கு என்ற இமேஜை பாதுகாத்து வைத்திருந்த நடிகை சினேகா ஒரு கட்டத்தில் கவர்ச்சி காட்டி நடிக்க தொடங்கினார். பொதுவாக, குடும்பப் பாங்கினியாக நடிக்கும் நடிகைகள் கவர்ச்சி பக்கம் திரும்பினால் அவர்களுடைய மார்கெட் குறைந்து விடும்.

ஆனால், சினேகாவுக்கு அதற்கு நேர் மாறாக நடந்து. கவர்ச்சியான உடைகள் அணிந்தாலும் அழகாகவே இருந்தார் அம்மணி. சமீபத்தில், நடிகர் தனுஷிற்கு ஜோடியாக சினேகா நடித்திருந்த ‘பட்டாஸ்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்திருந்த இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார்.தமிழ் சினிமாவில் பிரபல ஜோடிகளான அறியப்படும் பிரசன்னாவும், சினேகாவும் கடந்த 2012 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர்.


இத்தம்பதியினருக்கு விஹான் என்ற 4 வயதான ஆண் குழந்தைமற்றும் ஆத்யந்தா என்ற பெண் குழந்தையும் உள்ளது.குழந்தை பெற்ற பின்பும் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதீத கவனம் செலுத்தி வரும் சினேகா உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.


அந்த வகையில், முரட்டுத்தனமாக உடற்பயிற்சி செய்யும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், உங்களுக்கு வயசே ஆகல மேடம் என்று கூறி வருகிறார்கள்.

"உங்களுக்கு வயசே ஆகல மேடம்..." - புன்னகையரசி வெளியிட்ட முரட்டுத்தனமான புகைப்படம்..! - உருகும் ரசிகர்கள்..! "உங்களுக்கு வயசே ஆகல மேடம்..." - புன்னகையரசி வெளியிட்ட முரட்டுத்தனமான புகைப்படம்..! - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 22, 2020 Rating: 5
Powered by Blogger.