சுஷாந்த் சிங் தற்கொலைக்கு மட்டுமல்ல, இந்த நடிகையின் தற்கொலைக்கும் இது தான் காரணம் - நெஞ்சிருக்கும் வரை ஹீரோயின் விளாசல்..!


தமிழில் 'நெஞ்சிருக்கும் வரை, உன்னைப் போல் ஒருவன், பயணம், வெடி, 6' உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் நடித்தவர் பூனம் கவுர்.

சமீபத்தில் மறைந்த ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பிறகு பாலிவுட்டில் இருக்கும் 'நெபோட்டிசம்' பற்றி டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கடும் விவாதம் போய்க் கொண்டிருக்கிறது.

இயக்குனர் கரண் ஜோஹர் உள்ளிட்ட சில பிரபலங்கள் மீது ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். அவர்களது 'மூவி மாபியா'வால் தான் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்நிலையில் இயக்குனர் கரண் ஜோஹர் மீது விமர்சனங்கள் சொல்பவர்களை எதிர்த்து இயக்குனர் ராம்கோபால் வர்மா டுவீட் செய்து வந்தார். கரணுக்கு ஆதரவாக அவர் வாதிட்டு வருகிறார்.

இதனிடையே, ராம்கோபால் வர்மாவை விமர்சித்து பல டுவீட்டுகளைப் போட்டு வருகிறார் நடிகை பூனம் கவுர். “சுஷாந்த் சிங், ஜியா கான் ஆகியோருக்கு நடந்ததைப் பற்றியும், பாலிவுட்டின் பெரிய பிரபலங்கள் பற்றியும் ஏன் ராம் கோபால் வர்மா விமர்சிக்க மறுக்கிறார். ஏன் தென்னிந்திய மக்களைப் பற்றி மட்டும் அவர் விமர்சிக்க வேண்டும். ஏனென்றால் அது அவருக்கு எந்த விதத்திலும் பிரயோஜனமாக இருக்காது,” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகையான ஜியா கான் 2013ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தற்கொலைக்கும் சில பாலிவுட் பிரபலங்கள்தான் காரணம் என அவர் அம்மா இப்போதும் குற்றம் சாட்டுகிறார்.

சுஷாந்த் சிங் தற்கொலைக்கு மட்டுமல்ல, இந்த நடிகையின் தற்கொலைக்கும் இது தான் காரணம் - நெஞ்சிருக்கும் வரை ஹீரோயின் விளாசல்..! சுஷாந்த் சிங் தற்கொலைக்கு மட்டுமல்ல, இந்த நடிகையின் தற்கொலைக்கும் இது தான் காரணம் - நெஞ்சிருக்கும் வரை ஹீரோயின் விளாசல்..! Reviewed by Tamizhakam on June 18, 2020 Rating: 5
Powered by Blogger.