அடுத்த திருமணதிற்கு தயாரான நடிகை - கடுப்பில் குடும்பம் - தலையில் அடித்துக்கொள்ளும் கோலிவுட்..!
90-களில் அறிமுகமானார் அந்த மூன்றெழுத்து நடிகை. ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த அவர், பெரிய வரவேற்பு கிடைக்காததால், சினிமாவை விட்டு விலகினாராம். சினிமாவில் இருந்து விலகிய பின்னர் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவரை விவாகரத்து செய்துவிட்டார்.
பின்னர் வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்து, அவரையும் விவாகரத்து செய்துவிட்டாராம். அதன்பின்னரும் டான்ஸ் மாஸ்டர் ஒருவருடன் லிவிங் டுகெதரில் வாழ்வதாக கிசுகிசுக்கப்படும் அந்த நடிகை, அவரையும் விட்டு பிரிந்துவிட்டாராம்.
சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பெரிய முதலாளி நிகழ்ச்சியில் தனது அதட்டலான தொனியால் தற்போது மீண்டும் பிரபலமாகிவிட்டார். அதன் பின்னர் நாயகிக்கு வில்லி மற்றும் குணச்சித்திர வாய்ப்புகள் குவிகிறதாம்.
இந்த நிலையில், நடிகை தற்போது அடுத்த திருமணத்துக்கு தயாராகி அதனுடைய அறிவிப்பையும் வெளியிட்டுவிட்டார். இது அவரது குடும்பத்தில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.
மேலும், இந்து மதத்தை சேர்ந்த இவர் அவரது குடும்பத்தாரை கடுப்பேற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அவசரஅவசரமாக மூன்றாவதா ஒரு நபரை அதுவும் மாற்று மதத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளாராம்.
இதனால், கடும் கோபத்தில் இருக்கிறதாம் அவரது குடும்பம். தன்னுடைய வாழ்கை நன்றாக இருக்கவேண்டும் என்று அந்த பொண்ணு முடிவு பண்ணி கல்யாணம் பண்ணா நல்லா இருக்கும். எங்களுக்கும் சந்தோசம்.
ஆனால், எங்களை கடுப்பேற்ற வேண்டும் என்ற காரணத்துக்காக கல்யாணம் செய்தால் எப்படி உருப்படும் என வெளிப்படையாக பிறர் காது படும் படியே பேசுகிறார்களாம் குடும்பத்தார்.
அவர்கள் சொல்வது சரிதான். நம்முடைய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று திருமணம் செய்வது சரியா..? அல்லது இன்னொருத்தரை கஷ்டபடுத்தி, கடுப்பேற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக ஒருவரை திருமணம் செய்வது சரியா..? இதில் ஆளுயரத்தில் ஒரு பெண்குழந்தை வேறு உள்ளது என தலையில் அடித்துக்கொள்கிறது கோலிவுட்.
அடுத்த திருமணதிற்கு தயாரான நடிகை - கடுப்பில் குடும்பம் - தலையில் அடித்துக்கொள்ளும் கோலிவுட்..!
Reviewed by Tamizhakam
on
June 26, 2020
Rating:
