"என்னை விவாகரத்து பண்ணிட்டு நீ மட்டும் குஜாலா இருக்கியா..?" - இளம் நடிகருக்கு பெரியய்ய ஆப்பாக வைத்த மனைவி...!
இப்போதெல்லாம் சினிமா பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டாலே.. இன்னும் எத்தனை நாளைக்கு என்று கேட்கும் அளவுக்கு தான் இருக்கிறது இன்றைய நடிகர்கள் வாழும் வாழக்கை. மாதம் ஒரு விவாகரத்து செய்தி.. காரணம் கேட்டால் பரஸ்பரம் விவாகரத்து யார் மீதும் குறை சொல்ல விரும்பவில்லை என்று ஈசியாக கூறுகிறார்கள்.
அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் மூக்கை நுழைப்பது அவசியமில்லாத ஒன்று என்று மீடியாக்களும் ஒதுங்கி விடுகின்றன. ஆனால், இப்படியான தொடர் விவாகரத்துகள் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த ஹீரோவே விவாகரத்து பண்ணிட்டாரு.. இந்த ஹீரோயினே விவாகரத்து பண்ணிட்டாங்க.. இப்போ நல்லா தானே இருக்காங்க.. என்ற மனநிலைக்கு புதிதாக திருமணம் ஆகும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு ஒரு குருட்டு தைரியம் வந்து விடுவோமோ என்ற அச்சமும் இல்லாமல் இல்லை.
இனிமேல் இவர்களுடன் வாழவே முடியாது என்ற நிலையில் விவாகரத்து அவசியம் தான். ஆனால், தொட்டதுக்கெல்லாம் விவாகரத்து என கோர்ட் படியில் நிற்கும் ஜோடிகளை பார்க்கும் போது தான் மிகவும் வருத்தமாக உள்ளது. இந்நிலையில், வேறு நடிகையுடன் தொடர்பில் இருந்து கொண்டு தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்த இளம் நடிகருக்கு பெரிய்ய்ய்ய ஆப்பு ஒன்றை அடித்துள்ளார் அவரது முன்னாள் மனைவி.
திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை இருந்த நிலையில் திடீரென மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவித்தார் அந்த இளம் நடிகர். சரி, அவங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனை இருக்கும் என்று தான் பலரும் நினைத்தார்கள்.
ஆனால், நடிகர் இன்னொரு விளையாட்டு வீராங்கனை மீது ஈர்ப்பு கொண்டு தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துள்ளார் என்பது விவாகரத்திற்கு பிறகான அந்த நடிகரின் செயல்பாடுகளை பார்த்த பிறகு தான் தெரிய வந்தது. மேலும், புதுக்காதலியை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறாராம் நடிகர்.
இந்நிலையில், தன்னுடைய முன்னாள் கணவரின் புதுக்காதலியின் குடும்பத்திற்கு ஒரு மிக நீண்ட கடிதத்தை அனுப்பியுள்ளாராம் அவரது முன்னாள் மனைவி. இதனால், நடிகரின் புதுக்காதலி வீட்டில் இவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு நிலவுகிறதாம். இது தான் இப்போதைய, கோலிவுட் ஹாட் டாக்காக போய்க்கொண்டிருகின்றது.
"என்னை விவாகரத்து பண்ணிட்டு நீ மட்டும் குஜாலா இருக்கியா..?" - இளம் நடிகருக்கு பெரியய்ய ஆப்பாக வைத்த மனைவி...!
Reviewed by Tamizhakam
on
June 18, 2020
Rating:
