கனா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது நான் தான்..! - அட்ஜஸ்ட் பண்ணாம விட்டுட்டேன் - இளம் நடிகை புலம்பல்ஸ்..!


'கனா' படத்தை இயக்கி முதல் படத்திலேயே தன்னை ஒரு இயக்குனராக ரசிகர்கள் மனதிலும், தமிழ் சினிமாவிலும் பதிவு செய்து கொண்டவர், பிரபல நடிகரும், பாடகரும், பாடலாசிரியருமான நம்ம நெருப்பு குமாரு அருண் ராஜா காமராஜ்.

இவர் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இயக்கிய 'கனா' திரைப்படம் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.

இந்த படத்தை தொடர்ந்து இவர் அடுத்தபடியாக யாருடைய படத்தை இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில், தற்போது, நடிகர் கார்த்தி நடிக்க உள்ள படத்தை அருண் ராஜா காமராஜ் இயக்க உள்ளதாகவும், இந்த படத்தை கார்த்தி நடிப்பில் வெளியான 'தேவ்' படத்தை தயாரித்த ப்ரிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படம் குறித்த அதிகார பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என கோடம்பாக்கத்தில் பேச்சு அடிப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனா படத்தில் நடிக்க இளம் நடிகை சையாமி க்ஹெர் (Saiyami Kher)-ஐ தான் அணுகினார்களாம். 28 வயதே ஆகும் அழகு பதுமை.

ஹிந்தி நடிகை என்றாலே வெளுத்த போன தோல், துடைப்ப்ட குச்சி போல ஒல்லியாகவும் தான் இருப்பார்கள் என்ற பேச்சு உண்டு. ஆனால், செய்யாமை க்ஹெர் வாட்ட சாட்டமாக நம்ம தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு பிடித்தது போல டஸ்க்கியாகவும், க்யூட்டாகவும் இருக்கிறார்.


தெலுங்கு, ஹிந்தி, மராத்தி படங்களில் நடித்துள்ளார்.இவரை தான் முதலில் அழைத்தார்களாம், எனினும் வேறு பட வாய்ப்பு இருந்த காரணத்தால் நடிக்க முடியாமல் போக, ஐஸ்வர்யாவுக்கு அந்த வேடம் சென்றது.

அந்த நேரத்தில் நடிக்க வேண்டிய டேட் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிருந்தால் கனா பட வாய்ப்பை பெற்று நடித்திருப்பேன் எனவும், சிறப்பான படம் எனவும் தன் பேட்டியில் சொல்லியுள்ளார்.

கனா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது நான் தான்..! - அட்ஜஸ்ட் பண்ணாம விட்டுட்டேன் - இளம் நடிகை புலம்பல்ஸ்..! கனா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது நான் தான்..! - அட்ஜஸ்ட் பண்ணாம விட்டுட்டேன் - இளம் நடிகை புலம்பல்ஸ்..! Reviewed by Tamizhakam on June 26, 2020 Rating: 5
Powered by Blogger.