"இது ஒரு போதை..." - நடிகை திரிஷா எடுத்த அதிரடி முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி..!


தமிழ், தெலுங்கு சினிமாவில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இந்த கொரோனா லாக்டவுன் நேரத்தில் கூட கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் குறும்படம் ஒன்றில் நடித்தார். "கார்த்திக் டயல் செய்த எண்" என்ற அந்த குறும்படத்தில் சிம்பு, த்ரிஷா நடித்திருந்தனர்.

விண்ணைத் தாண்டி வருவாயா வெர்ஷன் 2 போல் அமைக்கப்பட்டிருந்த அந்த குறும்படத்தை இதுவரை 7 மில்லியனுக்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர். கல்யாணத்திற்கு பிறகு தன்னை பிரிந்து சென்ற ஜெர்ஸியுடன், முன்னாள் காதலன் கார்த்திக் போனில் பேசுவது போன்று குறும்படம் வடிவமைக்கப்பட்டிருந்தது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது.

அந்த குறும்படத்தில் த்ரிஷா, சிம்புவை தனது மூன்றாவது குழந்தை என குறிப்பிடுவார். அந்த டைலாக்கை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் சோசியல் மீடியாவில் புகுந்து விளையாட ஆரம்பித்தனர். சிம்புவின் சின்ன வயது போட்டோவை வைத்தும், குழந்தையாக இருக்கும் சிம்புவை த்ரிஷா தூக்கி கொஞ்சுவது போன்றும் விதவிதமான மீம்ஸ்களை உருவாக்கி கிண்டல் செய்தனர்.

இந்நிலையில் த்ரிஷா சோசியல் மீடியாவில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், தனது குறும்படத்தை கேவலமாக விமர்சித்த நெட்டிசன்களின் தரக்குறைவான செயல்பாடுகளும் த்ரிஷாவை கடுப்பேற்றி இருப்பதாக கூறப்படுகிறது.

த்ரிஷா தனது ட்விட்டர் பதிவில், "மகிழ்ச்சி, ஆனால் இந்த சமயம் என் மனதிற்கு ஒரு மறதி தேவை. டிஜிட்டல் ஒரு போதைப்பொருள். அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள். இதுவும் கடந்துபோகும். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். விரைவில் சந்திப்போம்" என பதிவிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் இருந்து விலகுவது குறித்து நடிகை திரிஷா கூறியுள்ளதை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

"இது ஒரு போதை..." - நடிகை திரிஷா எடுத்த அதிரடி முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி..! "இது ஒரு போதை..." - நடிகை திரிஷா எடுத்த அதிரடி முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி..! Reviewed by Tamizhakam on June 16, 2020 Rating: 5
Powered by Blogger.