முன்னாள் காதலியிடம் சுஷாந்த் சிங் கடைசியாக கூறிய விஷயம் என்ன..? - போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை..! - அதிர்ச்சி தகவல்கள்..!


பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14th June 2020) மதிய வேளையில் வீட்டில் தனிமையில் இருந்த நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வெளியாகி இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

34 வயது மட்டுமே ஆகும் சுஷாந்த் சிங் ராஜ்புட் மன அழுத்தம் காரணமாக தான் இந்த அதிர்ச்சி முடிவை எடுத்தார் என்று கூறப்பட்டு வருகிறது. அது தொடர்பாக போலீசார் மற்றும் நண்பர்கள், மற்றும் உறவினர்கள் உட்பட பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவர் காதலி என கூறப்படும் ரியா சக்ரபோர்த்தி இதனால் விசாரணை நடத்த உள்ளனர். சுஷாந்த் சிங்கிற்கு வரும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற இருந்தது என்கிற தகவலும் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் பற்றிய செய்தி கேட்டு, கடும் அதிர்ச்சியில் இருந்த அவரது சகோதரரின் மனைவி சுதா தேவி நேற்று இறந்துவிட்டார் என்கிற செய்தி சினிமா துறையில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சுஷாந்தின் அண்ணி மரணம் :


பிஹாரின் பூர்ணியா என்ற இடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட் வீட்டின் அருகிலேயே அவர்களும் வசித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சுஷாந்த் சிங் மரணம் பற்றிய செய்தி அறிந்ததும் அவரது சகோதரரின் மனைவி சாப்பிடுவதை நிறுத்தி விட்டார் என்று கூறப்படுகிறது.

அதனால் உடல் நிலை மோசமாகி அவர் இறந்தார் என்றும் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்த தினங்களில் குடும்பத்தில் இருவர் இறந்தது பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிவி சீரியல்களில் நடித்து புகழ் பெற்ற சுஷாந்த் சிங் ராஜ்புட், கை போச் சே என்கிற படத்தின் மூலமாக 2013ல் பாலிவுட்டில் நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பிறகு கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார் சுஷாந்த் சிங் ராஜ்புட்.

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அந்த படத்தை அதிகம் கொண்டாடினர். அதன்பிறகு கடைசியாக அவர் Chhichhore என்ற படத்தில் தான் நடித்து இருந்தார். சென்ற வருடம் வெளிவந்த இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

200 கோடி ரூபாய் வசூல் :


200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது அந்த படம். சுஷாந்த் சிங் இந்த விபரீத முடிவை எடுத்தது பற்றிய விவாதம் சமூக வலைத்தளங்களில் மிகத் தீவிரமான நடந்திருக்கிறது. அவர் கடந்த பல வருடங்களாகவே மன அழுத்தத்தால் கஷ்டத்தில் இருந்த நிலையில் அப்போது யாரும் எதுவுமே செய்யாமல், தற்போது அவரது இறப்புக்கு மட்டும் இரங்கல் தெரிவிக்கின்றனர் என பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.

இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோகர் பற்றியும் ட்விட்டர் வாசிகள் அதிக விமர்சனங்களை வைத்து வருகின்றனர். சினிமா துறையில் இருக்கும் நட்சத்திரங்களின் குழந்தைகளை சினிமாவில் நடிக்க வைத்து nepotism- திற்கு ஆதரவாகவே இருக்கிறார் அவர் என்றும்.

சுஷாந்த் சிங் போல திறமையான நடிகர்கள் எந்த பின்னணி இன்றி வருவதால், அவர்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை என்கிற குற்றச்சாட்டும் வைக்கின்றனர் நெட்டிசன்கள்.இந்நிலையில் சுஷாந்தின் முன்னாள் காதலியான ரியா சக்ரபர்த்தியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அங்கிதாவுடனான 6 ஆண்டு காதல் முறிந்த பிறகு, நடிகர் சுஷாந்த் பாலிவுட் நடிகையான ரியா சக்ரபர்த்தியுடன் காதல் உறவில் இருந்தார். அவர்கள் இருவரும் டேட்டிங் சென்ற போட்டோக்கள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை கிளப்பியது. சுஷாந்த் மன அழுத்தத்தின் தொடக்க நிலையில் இருந்த போதெல்லாம் என ரியா அவருடன்தான் இருந்துள்ளார்.

ஆனால் அவருக்கு மன அழுத்தம் அதிகமான போதுதான், தன்னுடைய நலத்தை கருத்தில் கொண்டு அவரை பிரிந்து சென்றுள்ளார். இதனால் மன அழுத்தம் ஒரு பக்கம் அதிகரிக்க, 6 மாதங்களில் அடுத்தடுத்து கமிட்டான 7 படங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் மன அழுத்தம் அதிகமாகி தனிமையில் இருந்த சுஷாந்த் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார்.

காதலி ரியா-விடம் கிடுக்குபிடி விசாரணை :


இதனை தொடர்ந்து நடிகை ரியாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்த் சிங் தற்கொலைக்கு காரணம் என்ன..? உங்களிடம் சுஷாந்த் சிங் கடைசியாக என்ன சொன்னார்..? என்பது குறித்து ரியாவிடம் போலீசார் நடத்தி வருகின்றனர். மேலும் அவர் உடலில் என்ன பிரச்சனை இருந்தது, மன ரீதியாக என்ன பிரச்சனைகளை சந்தித்தார் என்றும் விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பான விபரங்கள் இன்று வெளியாகும் என தெரிகின்றது. மேலும், அடுத்தடுத்து ஏழு படங்களில் சுஷாந்த் நீக்கப்படுவதற்கு காரணம் சல்மான் கான் உள்ளிட்ட சில நடிகர்கள் தான் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளது சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுஷாந்த் சிங் தற்கொலை முடிவு எடுக்க காரணமானவர்களை நிச்சயம் தண்டிக்க வேண்டும் என்று பாலிவுட் ரசிகர்கள் ஒத்த குரலில் கூறி வருகிறார்கள்.

முன்னாள் காதலியிடம் சுஷாந்த் சிங் கடைசியாக கூறிய விஷயம் என்ன..? - போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை..! - அதிர்ச்சி தகவல்கள்..! முன்னாள் காதலியிடம் சுஷாந்த் சிங் கடைசியாக கூறிய விஷயம் என்ன..? - போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை..! - அதிர்ச்சி தகவல்கள்..! Reviewed by Tamizhakam on June 17, 2020 Rating: 5
Powered by Blogger.