"இதனை திருப்தி படுத்தினால் போதும்" - அமலா பாலுக்கு என்னப்பா ஆச்சி..! - புலம்பும் ரசிகர்கள்..! - வைரல் புகைப்படம்..!


சமீப காலமாக இணையத்தில் பெரும் சர்ச்சைக்கு ஆளானார் இளம் நடிகை அமலாபால். முன்னணி நடிகையாக பீக்கில் இருந்த நேரத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். ஆனால், அது அவருக்கு நீண்ட நாள் நிலைக்க வில்லை. துரதிர்ஷ்ட வசமாக விவகாரத்தில் போய் முடிந்தது.

அமலாபாலுடன் திருமணம் செய்து கொண்டதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டார் பாவ்னிந்தர் சிங். ஆனால், சில மணித்துளிகளில் அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தையே நீக்கிவிட்டார் பாவ்னிந்தர் சிங்.

இந்தத் திருமண சர்ச்சை தொடர்பாக அமலாபால் எங்குமே பேட்டி அளிக்கவில்லை. ஆனால், அமலாபால் பேட்டி என்று பல இணையதளங்களில் வெளியாகி வருகிறது. அதற்கும் அமலாபால் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே, சமீபத்தில் நடிகை அமலா பால், ஓஷோ எழுதியிருக்கும் 'தி புக் ஆஃப் வுமன்' என்ற புத்தகத்தின் வரிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன் தமிழாக்கம்: ''தி பிராஃபட்டில் எல்லா சிறந்த கேள்விகளையுமே பெண்களே கேட்டிருக்கின்றனர்.

முக்கியமாக பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் இயந்திரமாக மட்டுமே பயன்படுகிறார்கள் எனவும், பெண்பிரசவ வலியை அனுபவிகிறாள். ஆண் என்ன செய்கிறான் என்று கேட்டிருந்தார்.

புத்தகத்தின் இரண்டாம் அத்தியாயத்தில் இந்த வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வரிகளைப் பகிர்ந்ததற்கான காரணம் எதையும் அமலா பால் குறிப்பிடவில்லை. அமலாபால் இதை மட்டும் தனியாகப் பகிர்ந்திருப்பதால், இந்தக் கருத்துக்கு அவர் உடன்படுகிறார் என்பது தெளிவாகிறது.

சுதந்திர பறவையாக இருந்த அமலாபாலுக்கு திடீர்ன்னு என்ன ஆச்சு..? தத்துவங்களை கூற ஆரம்பித்து விட்டார் என்று புலம்பி வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

கூட்டுப்புழுவின் கூடு சிறைச்சாலையா..?

பெண் அடிமைத்தனம் என மேம்போக்காக பெண்ணியம் பேசி திரியும் சிலர் பெண்களை தவறாக வழிநடத்துகிறார்கள். பெண் சுதந்திரம் என்பதே ஒரு போலியான விஷயம். பெண்கள் எங்கே அடிமைப்படுதப்பட்டார்கள். பெண்களை தெய்வமாக வணங்கும் இந்த தேசத்தில் பெண் சுதந்திரம் பேசுவது தற்குறித்தனம் என்று தான் கூற வேண்டும்.

இவர்களுக்கு விளக்கம் கொடுத்தால் கொடுத்துக்கொண்டே தான் இருக்க வேண்டும்.  ஒரே ஒரு விஷயத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். கூட்டுக்குள் இருக்கும் கூட்டுப்புழுவிற்கு அந்த கூட்டை சிறைச்சாலை என்று நினைத்தால் அது பட்டுப்பூச்சியாக வானில் சிறகடித்து பறக்க முடியாது. இதிலேயே பெண் அடிமைத்தனம் பேசும் மேதாவிகளுக்கு பதில் உள்ளது.

இது ஒருபுறம் இருக்க தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "உங்கள் ஆன்மாவை திருப்தி படுத்துங்கள்.இந்த சமூகத்தை அல்ல" என்று கூறி கன்னத்தின் மீது கை வைத்தபடி போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அமலா பால்.

இதனை பார்த்த ரசிகர்கள், நீங்கள் தான் எங்களின் ஆன்மா என்றும் கிருஷ்ணன் போல இருக்கிறீர்கள் என்றும் கூறி வருகிறார்கள்.


"இதனை திருப்தி படுத்தினால் போதும்" - அமலா பாலுக்கு என்னப்பா ஆச்சி..! - புலம்பும் ரசிகர்கள்..! - வைரல் புகைப்படம்..! "இதனை திருப்தி படுத்தினால் போதும்" - அமலா பாலுக்கு என்னப்பா ஆச்சி..! - புலம்பும் ரசிகர்கள்..! - வைரல் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on June 04, 2020 Rating: 5
Powered by Blogger.