தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா. இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் படும் கஷ்டங்களுக்கு ஆறுதலாக சமூக வலைத்தளங்களில் ஓவியா ஆர்மி அமைத்து கொண்டாடினார்கள் ரசிகர்கள். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஓவியாவுக்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் குவிந்தனர்.
மேலும் அடுத்ததடுத்த படங்களில் பிசியாக நடிக்க ஆரம்பித்தார் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவுக்கு ரசிகர் பட்டாளமே உருவாகியது. ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில், தன்னுடைய சகப்போட்டியாளரான ஆரவ்வை காதலித்து, அந்த காதல் தோல்வியடைந்த நிலையில் தற்கொலை முயற்சி செய்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
அந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு முன்பு ஓவியா நடிப்பில் வெளியான 90 ml என்ற படம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது.
மேலும் ஓவியா இந்தப்படத்தில் புகைபிடிப்பது , மது குடிப்பது, க*சா அடிப்பது போன்றும் கவர்ச்சியாகவும் நடித்திருந்தார்.இதனால், குடும்ப பெண் ரசிகைகளை மொத்தமாக இழந்தார் ஓவியா.
அதன் பிறகு எந்த பட வாய்ப்பும் ஓவியாவுக்கு வந்ததாக தெரியவில்லை. இந்நிலையில் ஓவியா ஹாலிவுட் நடிகைகளுக்கு இணையாக படு கவர்ச்சியான போட்டோ ஷூட் நடித்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள், ஓவியாம்மா.. இது ஓவரும்மா.. என்று கூறி வருகிறார்கள்.



