தகடு தகடு..! - விக் இல்லாமல் இருக்கும் நம்ம தகடின் ஒரிஜினல் ஹேர் ஸ்டைலை பாத்திருக்கிறீர்களா..? - இதோ புகைப்படம்..!


தகடுன்னா தமிழ் நாட்டுக்கே தெரியும். தலைவன் தங்க குணம் ஊருக்கெல்லாம் புரியும் என்ற வரிகளுக்கு அக்மார்க் சொந்தகாரர் நம்ம சத்யராஜ் தான். கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்து, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக இருந்து, தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்துவைத்தவர்.

ஒரு வில்லனாகத் திரையுலகில் அறிமுகமான அவர், ‘கடலோரக் கவிதைகள்’ என்ற படத்தின் மூலமாக சிறந்த நடிகராக மாறி, ‘வில்லாதி வில்லன்’ என்ற திரைப்படத்தை இயக்கி, ‘லீ’ என்ற திரைப்படம் மூலமாகத் தயாரிப்பாளராக உருவெடுத்தார்.

சினிமாவில், ‘என் கேரக்டரே புரிஞ்சிக்க மட்டிங்கறியே’, ‘என்ன மா…. கண்ணு’, ‘தகடு தகடு’ என்ற வசனங்களால் தமிழ் ரசிகர்கள் மனத்தில் இன்றளவும் நிலைத்து நிற்கிறார். கொங்குத் தமிழ் பேசி, தனக்கென உரித்தான தனி பாணியில் அனைவரின் கவனத்தையும் தன்பால் ஈர்த்தவர்.

ஹீரோ, எதிர்மறைக் கதாபாத்திரம், காமெடி என அனைத்து வகையான கதாபாத்திரங்களில் நடித்த அவருக்கு ‘பெரியார்’ திரைப்படமும், ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ திரைப்படமும் வரலாற்று சாதனைப் படைத்தப் படங்களாக மாறி, அவருக்கு விருதுகளையும் பெற்றுத்தந்தது.

அவர் நாயகனாக நடித்த காலக்கட்டங்களில், அனைத்து முன்னணி கதாநாயகிகளுடன் ஜோடி சேர்ந்து நடித்தும், ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, என முன்னணி ஹீரோக்களுடனும் நடித்தும் புகழ்பெற்றார். தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’, ‘எம்.ஜி.ஆர் விருது’, ‘பெரியார் விருது’, ‘ஃபிலிம்ஃபேர் விருது’, ‘விஜய் விருது’ என எண்ணற்ற விருதுகளை வென்ருள்ளார்.

பாகுபலியில் கட்டப்பா-வாக மின்னிய சத்தியராஜ் இந்தியா முழுதும் கட்டப்பா-வாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். இன்றளவும் தமிழ்த் திரையுலகில் தனது நடிப்பால் நிலைத்து நிற்கும் சத்யராஜ்-ஐ பெரும்பாலும் வழுக்கை தலையுடன் அல்லது விக் மாட்டிய தலையுடன் தான் பார்த்திருப்பீர்கள்.

அவருடைய ஒரிஜினல் ஹேர் ஸ்டைல்-ஐ பலரும் பார்த்திருக்க மாட்டார்கள். இதோ, திருமணம் ஆகி, குழந்தைகள் பிறந்த புதிதில் ஒரிஜினல் முடியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம்.தகடு தகடு..! - விக் இல்லாமல் இருக்கும் நம்ம தகடின் ஒரிஜினல் ஹேர் ஸ்டைலை பாத்திருக்கிறீர்களா..? - இதோ புகைப்படம்..! தகடு தகடு..! - விக் இல்லாமல் இருக்கும் நம்ம தகடின் ஒரிஜினல் ஹேர் ஸ்டைலை பாத்திருக்கிறீர்களா..? - இதோ புகைப்படம்..! Reviewed by Tamizhakam on June 10, 2020 Rating: 5
Powered by Blogger.