பென்குயின் படம் காப்பி..! - அந்த படத்தின் கதை - வேறொரு படத்தின் கிளைமாக்ஸ்..!


அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் எழுதி இயக்கி, கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் படம் பென்குயின். இந்த திரைப்படத்தை தனது ஸ்டோன் பென்ச் கிரியேஷன்ஸ் மூலம், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இதனை தயாரித்துள்ளார். பென்குயின் திரைப்படம் அமேசான் ப்ரைமில் இன்று வெளியாகியுள்ளது.

ஏற்கனவே நடிகை ஜோதிகாவின், பொன்மகள் வந்தாள் டிஜிட்டலில் வெளியாகியிருந்த நிலையில், அதே தளத்தில் வெளியாகி இருக்கும் இரண்டாவது திரைப்படம் இது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

ஒரு நாள் குழந்தை காணாமல் போகிறான், உடனே தனது கணவர் தான் மகனை கடத்தி இருக்க வேண்டும் என நினைக்கிறார். பின்னர் நாட்கள் கடந்து மகன் கிடைத்து விடுகிறான். அவனை கடத்தியது யார், எதற்காக என்பது தான் பென்குயின்.

கொலை, மர்மம், பயம் என த்ரில்லர் படத்துக்கான அம்சங்களுடன் படம் தொடங்குகிறது. முதல் கணவனை விட்டுப் பிரிந்த நிலையில், இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, இரண்டாவது முறை கர்ப்பம் தரிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

அதோடு காணாமல் போன மூத்த மகன், அஜய்யை தேடி அலைகிறார். முகமூடி அணிந்த கொலையாளிகள் இடம்பெறும் படங்களில் மட்டுமே பாதிக்கப்பட்டவர்கள் சுற்றித் திரிவார்கள். அதுவும் கர்ப்பத்தின் முக்கியமான கட்டத்தில் இருக்கும் ஒரு பெண், அடர்ந்த காடுகளில் அலைந்து திரிந்து தனது மகனை தேடுகிறார்.

ஒரு கட்டத்தில் மகன் கிடைத்து விடவே, மகனை கடத்தியது யார்..? என்ன காரணம்..? என்று தேடி செல்கிறார் கீர்த்தி சுரேஷ். இறுதியில் கண்டுபிடித்தும் விடுகிறார். யார்..? எதற்காக கடத்தினார்கள் என்பது தான் க்ளைமாக்ஸ். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.


மேலும், ஹாலிவுட் படங்களின் காப்பி, ராட்சசன் மற்றும் சைகோ படங்களில் சாயல் என பொதுவான விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. எப்படி இருந்தாலும் ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம் என்று சொல்லும் அளவுக்கு நன்றாகவே உள்ளது பென்குயின்.

பென்குயின் படம் காப்பி..! - அந்த படத்தின் கதை - வேறொரு படத்தின் கிளைமாக்ஸ்..! பென்குயின் படம் காப்பி..! - அந்த படத்தின் கதை - வேறொரு படத்தின் கிளைமாக்ஸ்..! Reviewed by Tamizhakam on June 19, 2020 Rating: 5
Powered by Blogger.