ஆத்தாடி..! - மறுபடியும் மொதல்ல இருந்தா..? - நயன்தாரா அடுத்து நடிக்கும் படத்தின் இயக்குனர் யாரு தெரியுமா..?
நடிகை நயன்தாரா சிம்புவுடன் வல்லவன் படத்தில் நடித்தபோது இருவரும் காதலித்தார்கள். ஆனால், கல்யாணம் முடிவதற்கு முன்பே இருவரும் ஒரு அறையில் தனிமையில் இருந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது படத்திற்காக எடுக்கப்பட்டது என்று கூறி விளக்கமளித்தார் நயன். பிறகு, அந்த காதல் முறிந்த பிறகு நயன்தாரா டான்ஸ் மாஸ்டரும், நடிகரும், இயக்குநருமான பிரபுதேவாவை காதலித்தார். ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகளுக்கு அப்பாவான தன் கணவரை நயன்தாரா மயக்கிவிட்டதாக பிரபுதேவாவின் மனைவி ரம்லத் புகார் தெரிவித்தார்.
அந்த பிரச்சனை பெரும் பிரச்சனையானது. இருப்பினும் நயன்தாரா தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. பிரபுதேவாவை திருமணம் செய்ய இந்து மதத்திற்கு மாறினார் நயன். மேலும் தன் கையிலும் பிரபுதேவாவின் பெயரை பச்சைக் குத்தினார்.
பிரபுதேவாவுக்காக சினிமாவை கைவிட முடிவு செய்தார் நயன்தாரா. ஆனால் அந்த காதலும் தோல்வி அடைய தனக்கு தெரிந்த நடிப்பை தொடர முடிவு செய்தார் நயன். நானும் ரௌடி தான் படத்தில் நடித்தபோது நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில் நயன்தாரா பிரபுதேவாவின் இயக்கத்தில் மீண்டும் நடிக்கப் போவதாக ஒரு வதந்தி தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்த புதுப்பட தகவலை நயன்தாரா அல்லது விக்னேஷ் சிவன் உறுதி செய்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள்.
பாலிவுட்டில் எல்லாம் முன்னாள் காதலர்கள் மீண்டும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள். முன்னாள் காதலர்கள் சேர்ந்து நடித்தால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி விடுகிறது.
இந்நிலையில் நயன்தாரா, பிரபுதேவா மீண்டும் சேர்ந்து படம் பண்ணினால் எதிர்பார்ப்பு அதிகமாகிவிடும். அதனால் நயன்தாரா பிரபுதேவா இயக்கத்தில் நடித்தால் தவறு எதுவும் இல்லை. இது அவரின் கெரியர். கெரியரையும், பர்சனலையும் நயன்தாரா மிக்ஸ் பண்ண மாட்டார் என்று கூறுகிறார்கள் நயன்தாரா குறித்து விவரம் அறிந்தவர்கள்.
ஆத்தாடி..! - மறுபடியும் மொதல்ல இருந்தா..? - நயன்தாரா அடுத்து நடிக்கும் படத்தின் இயக்குனர் யாரு தெரியுமா..?
Reviewed by Tamizhakam
on
June 03, 2020
Rating:
