இந்த வயசுல இந்த பழக்கம் எல்லாம் தேவையா..? - வைரலாகும் புகைப்படங்கள்..! - உச் கொட்டும் ரசிகர்கள்..!


தமிழ், தெலுங்கு என கிட்ட தட்ட 40 ஆண்டுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருக்கும் அவர் சமீபத்தில் குடிப்பழக்கம் தொடர்பான விவகாரத்தில் சிக்கியிருப்பது பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

சினிமா மட்டுமின்றி, சீரியல்களை தயாரித்தும், நடித்தும் வருகிறார் இந்த நடிகை. வயதனாலும் கும்மென்று இருக்கும் இவர் படுக்கையறை காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள் என்றால் கூட மறுக்காமல் ஓகே சொல்லி நடிக்கிறார். இதனால், இவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.

கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான ஒரு படத்தில் தன்னுடைய வயதில் பாதி கூட இல்லாத ஒரு ஆணுடன் படுக்கையறை காட்சி ஒன்றில் நடித்து இள வட்டங்களை அதிர வைத்தார்.

90ஸ் கிட்ஸ்க்கு மட்டுமல்ல 2K கிட்ஸ்க்கும் நான் தான் கனவுக்கன்னி என்று சொல்லும் அளவுக்கு 40 வயதிலும் இளமை துள்ளல் காட்டுகிறார் அம்மணி. ஆனாலும், இவருக்கு சினிமாவில் பெரிய ரசிகர் வட்டம் உள்ளது. சமீபத்தில் வெளியான பிரமாண்ட படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமான நடிகையாக உருவெடுத்தார்.

இவர் திருமணம் ஆனவர் என்றாலும் கணவரும், இவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். அட கொரோனா கொரண்டைனா இருக்கும் என்று நினைக்காதீர்கள். கடந்த ஐந்து வருடத்திற்கு மேலாக இவர்கள் கொரண்டைனில் தான் இருக்கிறார்கள்.

இப்படி ஸ்மூத்தாக போய்க்கொண்டிருந்த இவரது பெயரை டேமேஜ் ஆக்கும் விதமாக ஒரு தகவல் வைரலாகியது. இவரது நான்கு சக்கர சொகுசு காரில் பாட்டில் பாட்டிலாக சரக்கு கடத்தப்பட்டது தான் இப்போது பஞ்சாயத்து.

இந்த விவகாரம் குறித்து நடிகை வாயே திறக்காமல் இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, இந்த நடிகை கலந்து கொண்ட இரவு நேர பார்டிகளில் பாட்டிலும், கையுமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு விமர்சித்து வருகிறார்கள் நெட்டிசன்கள். இந்த வயசுல இந்த பழக்கம் எல்லாம் தேவையா.? என்று உச் கொட்டி விட்டு நகர்கிறார்கள் ஒரு தரப்பு ரசிகர்கள்.

இந்த வயசுல இந்த பழக்கம் எல்லாம் தேவையா..? - வைரலாகும் புகைப்படங்கள்..! - உச் கொட்டும் ரசிகர்கள்..! இந்த வயசுல இந்த பழக்கம் எல்லாம் தேவையா..? - வைரலாகும் புகைப்படங்கள்..! - உச் கொட்டும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 13, 2020 Rating: 5
Powered by Blogger.