அட..! - சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவிருந்த ஹீரோயின் இந்த நடிகையா..? - பேசாம அவங்கள போட்டிருக்கலாம்..!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் முதன்முறையாக உருவாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற திரைப்படம் தான் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான "சிவாஜி". இந்த படம் ரிலீஸ் ஆன போது கிட்ட தட்ட 90% முதல் 95% வரையிலான திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

தியேட்டரின் நிலை மற்றும் தரம் பொருத்து மிளகாய் பஜ்ஜி கணக்காக படம் விற்பனையானது. குறைந்த எண்ணிகையிலான தியேட்டர்களில் வெளியிட்டு 50 நாள் ஓட்டுவதை விட அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியிட்டு 10 நாள் ஒட்டினாலே வசூல் செய்து விடலாம் என்ற ஃபார்முலாவை அறிமுகப்படுத்தியதே சிவாஜி தான்.

சாத்தியமே இல்லாத காட்சிகளை கூட ரஜினி நடித்தால் சாத்தியம் என்பதை காட்டியிருப்பார் ஷங்கர். கமர்சியல் படங்களுக்கு உண்டான அனைத்து அம்சமும் கலந்து அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் பின்னணி இடையும் செம ஹிட்.

முதன்முறையாக ரஜினிக்கு ஜோடியாக அந்த படத்தில் இளம் நடிகை ஸ்ரேயா நடித்து இருப்பார். சிவாஜி படத்தில் நடிக்கும் போது அவருக்கு வெறும் 24 வயது தான். ஆனால் முதன் முதலில் சங்கர் ஸ்ரேயாவை தேர்வு செய்யவில்லையாம்.

தமிழ்செல்வி கதாபாத்திரத்திற்கு ஒரு தமிழ் நடிகை இருந்தால் சரியாக இருக்கும் என விரும்பினாராம். அப்படி முதலில் தேர்வு செய்யப்பட்டவர் தான் சினேகா. ஆனால் சில காரணங்களினால் அவர் அந்த படத்திலிருந்து விலக அதன்பிறகுதான் ஸ்ரேயாவுக்கு வாய்ப்பு சென்றிறுக்கின்றது.


அந்த காலகட்டத்தில், சினேகாவுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இப்போதும் கூட அந்த ரசிகர் பட்டாளம் அப்படியேதான் இருக்கிறது. ரஜினியுடன் நடித்திருந்தால் சினேகா இன்னொரு ரவுண்டு வந்திருப்பாரோ என்னமோ.

பாடல் காட்சிகளில் கிளாமரில் அதகளம் பண்ணி இருப்பார் ஸ்ரேயா. இயக்குனர் ஷங்கர் சமீபத்திய நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது இந்த தகவலை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அட..! - சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவிருந்த ஹீரோயின் இந்த நடிகையா..? - பேசாம அவங்கள போட்டிருக்கலாம்..! அட..! - சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவிருந்த ஹீரோயின் இந்த நடிகையா..? - பேசாம அவங்கள போட்டிருக்கலாம்..! Reviewed by Tamizhakam on June 21, 2020 Rating: 5
Powered by Blogger.