"அரைகுறை ஆடையில் வீடியோ கால்.." பணத்தாசையால் பங்கமான பிரபல இளம் நடிகையை விளாசிய காவல்துறை..!


பிரபல தமிழ் நடிகை ஒருவர் சில சில்வண்டு சில்லரைகளிடம் எக்குதப்பாக சிக்கி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிட்சையமான கேரளா நடிகை அவர்.

போதிய பட வாய்புகள் இல்லாததால் கவர்ச்சியில் அடிமட்ட அளவுக்கு இறங்கி அடித்தார். கன்னட படங்களில் 60 வயது நடிகர்களுடன் படுக்கயறை காட்சிகளில் கூட நடித்தார். இது சினிமா, நடிப்பு என நழுவி விடலாம்.

ஆனால், நிஜ வாழ்க்கையில் பணத்தாசையால் பங்கமாகி குடும்பத்துடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார் அம்மணி. சமீப காலமாக, இளசுகளை கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு வீடியோ செயலியில் அம்மணியுடன் நான் பெரிய வஸ்தாது எனவும் துபாயில் 150 பெட்ரோல் கிணறு இருப்பதாகவும், நகைக்கடை வைத்திருப்பதாகவும் கூறி நெருக்கமாகியுள்ளார் ஒரு ஆசாமி.

யார் என்ன என்றே தெரியாமல் நகைக்கடை, பெட்ரோல் கிணறு என்றதும் அந்த ஆசாமியுடன் கடலை போட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில், நாம கண்ணாலம் கட்டிக்கலாம் என்பது வரை சென்றுள்ளது. மேலும், வாட்சப் உள்ளிட்ட ஆப்களில் வீடியோ காலில் கன்றவியான உடைகளில் உரையாடி தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்டிருக்கிறார் நடிகை.

ஆனால், அந்த ஆசாமிக்கு சொந்தமாக ஒரு பெட்டிக்கடை கூட இல்லை என்பது வேறு விஷயம். உச்சகட்டமாக, உங்க வீட்ல சொல்லி என்னை பொண்ணு கேக்க சொல்லுங்க என்று கூறியுள்ளார் நடிகை.

சரி என கூறிய ஆசாமி நான்கைந்து ஆசாமிகளை செட் செய்து நடிகை வீட்டுக்கு அனுப்பி பெண் கேட்பது போலவும், கொரோனா ஊரடங்கால் எளிமையாக திருமணத்தை வைத்துக்கொள்ளலாம், என்னை கேட்டால் நான் துபாயில் இருப்பதாகவும் சொல்லிவிடுங்கள் என்று பேசி வரும் படியும் அனுப்பியுள்ளார்.

அந்த ஆசாமி செட்டப் செய்த ஆசாமிகளும் நடிகை வீட்டுக்கு ஒரு ஸ்விப்ட் காரில் சென்றுள்ளனர். நடிகையின் வீட்டுக்கு வந்தவர்கள் எதோ பார்க்காததை பார்த்தது போல அவரது வீடு மற்றும் காரை வெறிக்க வெறிக்க பார்த்துள்ளனர்.

இதனால், சந்தேகமடைந்த நடிகை அவர்களை தீவிரமாக கண்காணித்துள்ளர். வந்தவர்களும் திருமணம் செய்யும் அளவுக்கு பேசி விட்டு வந்தார்கள். அவர்கள் வந்த காரின் நம்பர் பிளேட்டை கவனித்த நடிகையின் உறவினர்கள் அது டி போர்டு நம்பர் ப்ளேட் என்பதால் அது வாடகை கார் என்பதை உறுதிபடுத்தியுள்ளனர்.

இதனால், சுதானமானார் நடிகை. அவருடைய காதலனுக்கு ( அதான் அந்த டுபாக்கூர் ஆசாமி) போன் போட்டு குறுக்கு கேள்வி கேட்டுள்ளார். இதனால், உஷாரான அந்த ஆசாமி தன்னுடைய உண்மை முகத்தை காட்டியுள்ளான். திருமணம் செய்துகொள்ள வில்லைஎன்றாலும் பரவாயில்லை நான் கேட்கும் பணத்தை கொடுத்து விட்டால் உன்னை விட்டு விடுகிறேன், இல்லையென்றால் வீடியோ கால் ரெக்கார்டிங்குகளை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளான்.

அதிர்ந்து போன நடிகை உடனடியாக போலிசுக்கு என்று புகார் கொடுக்கவே அந்த ஆசாமிகளை 10 மணி நேரத்தில் அலேக்காக தூக்கியுள்ளது காவல் துறை. மேலும், அந்த ஆசாமிகளிடம் அம்மணி அரைகுறை ஆடையில் இருந்த வீடியோ கால் ரெக்கார்டிங்குகளை அந்த நடிகையிடமே கொடுத்து டெலிட் செய்ய சொல்லியிருகிறார்கள்.

ஆசாமிகளுக்கு ஒரு பக்கம் பரேடு நடக்க, நடிகைக்கும் மறு பக்கம் பரேடு நடந்துள்ளது. மண்டையில மண்ணா இருக்கு, விவரம் தெரிந்த உங்களை போன்ற ஆட்களே இப்படி சிக்கினால் என்ன அர்த்தம் என்று விளாசியுள்ளது காவல்துறை.

"அரைகுறை ஆடையில் வீடியோ கால்.." பணத்தாசையால் பங்கமான பிரபல இளம் நடிகையை விளாசிய காவல்துறை..! "அரைகுறை ஆடையில் வீடியோ கால்.." பணத்தாசையால் பங்கமான பிரபல இளம் நடிகையை விளாசிய காவல்துறை..! Reviewed by Tamizhakam on June 25, 2020 Rating: 5
Powered by Blogger.