திருமணமான நடிகருடன் தகாத தொடர்பு - பகலிலும் குடி - தடம் மாறிப்போன இளம் நடிகை..! - உச் கொட்டும் கோடம்பாக்கம்..!


தமிழ் சினிமாவில் ஒருவருக்கு நேரம் நன்றாக இருந்தால் அவர் கிடுகிடுவென முன்னேறுவார். அப்படி திடீரென்று கிடுகிடுவென வளர்ந்த நடிகைதான் அந்த டஸ்க்கி ப்யூட்டி நடிகை.

திடீர் பிரபலமான நடிகர், நடிகைகள் பலரும் அதே போல ஒரு நாள் திடீரென காணாமல் போய்விடுவார்கள். அதேபோல் இந்த மலையாள குருவியும் காணாமல் போய்விட்டது.

டஸ்க்கி ப்யூட்டி நடித்த முதல் படம் யூ ட்யூபில் பெரிய ஹிட். பழங்கால நாகரீகத்தின் பெயரில் வெளியான நாகரீகமே இல்லாத படம். இது ஒரு பலான படம் என்பதால் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள திரையரங்கில் ஐம்பது நாட்களுக்கு மேல் ஓடியது. இதனால், டஸ்க்கி ப்யூட்டியின் ஆரம்பகால இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது.

ஆனால், கிராமத்து இளம்பெண் போல வாட்ட சாட்டமான வளைவுகளையும், உடல் அசைவுகளையும் காட்டி நடித்தததால் இளவட்டங்கள் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார் அம்மணி.

அவரது இரண்டாவது படமான அழிந்து வரும் பறவை படத்தின் வெற்றியை தொடர்ந்து முன்னணி தமிழ் நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார். மார்கெட் உச்சத்தில் பறந்துகொண்டிருந்த போது, பிரபல இயக்குனருடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை, வேறொரு விவாகரத்து வாங்கி விட்டார். ஏற்கனவே, திருமணமான நடிகருடன் ஏற்பட்ட தகாத தொடர்பு தான் இந்த விவாகரத்திற்கு காரணம் என்று  கூறப்பட்டது.

தற்போது, சிங்கிலாக இருக்கும் அம்மணிக்கு பட வாய்ப்புகள் சுத்தமாக வருவது கிடையாது. முழுவதுமாக, ஆடைகளை துறந்தும் வேலைக்கு ஆகவில்லை. இந்த விரக்தியினால், குடி பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். கொஞ்சம் கொஞ்சமாக பகலிலும் குடிக்க ஆரம்பித்து விட்டாராம்.

இதை பார்த்த அம்மணியின் பெற்றோர்கள் அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க பேசி வந்தார்கள். ஆனால் அம்மணியோ, வேறு ஒரு நடிகர் மீது காதல் வயப்பட்டு வீட்டுக்கு தெரியாமல் திருமணம் கூட செய்துகொண்டாராம்.

இதனை அறிந்த பெற்றோர்கள் அம்மணியின் மீது ஏகத்துக்கும் கடுப்பில் இருக்கிறார்களாம். அம்மணி இப்போது மெல்ல மெல்ல குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு வருவதாகவும், புதுக்கணவர் கொடுத்த ஆலோசனையின் படி யோகா, மனவளக்கலை ஆகியவற்றை பயின்று வருவதாகவும் கூறுகிறார்கள்.

நல்லா வந்திருக்க வேண்டிய நடிகை இப்படி குடி பழக்கத்தினாலும், வயசு கோளாறினாலும் இப்படி ஆகிவிட்டாரே என்று உச் கொட்டுகிறது கோடம்பாக்கம்.

திருமணமான நடிகருடன் தகாத தொடர்பு - பகலிலும் குடி - தடம் மாறிப்போன இளம் நடிகை..! - உச் கொட்டும் கோடம்பாக்கம்..! திருமணமான நடிகருடன் தகாத தொடர்பு - பகலிலும் குடி - தடம் மாறிப்போன இளம் நடிகை..! - உச் கொட்டும் கோடம்பாக்கம்..! Reviewed by Tamizhakam on June 20, 2020 Rating: 5
Powered by Blogger.