தன்னை ஆபாசமாக விமர்சித்த நபர் - நேரில் சென்று கண்டித்த பிரபல நடிகை..!
சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் நடிகைகள் உள்ளிட்ட பிரபலமான பெண்களை எப்படி வேண்டுமானாலும் மோசமாக விமர்சிக்கலாம் என்று நினைக்கும் சில விஷமிகளுக்கு பாடம் புகட்டும் விதமாக மலையாள நடிகை அபர்ணா நாயர் செய்துள்ள காரியம் மிரள வைத்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய அபர்ணாவிடம் ஒரு ரசிகர் மோசமான கேள்வி ஒன்றை கேட்டார். அதற்கு அபர்ணா நாயர் கடுமையாக பதிலடி கொடுத்திருந்தார்.
என்றாலும் அவரது மனது சமாதானம் ஆகவில்லை. இனி ஒரு நபர் எந்த பெண்ணையும் இப்படி மோசமாக கமென்ட் செய்ய அனுமதிக்க கூடாது என முடிவெடுத்த அபர்ணா நாயர், கேரள சைபர் க்ரைம் போலீஸாரிடம் அந்த நபர் பற்றி புகாரளித்தார்.
அடுத்த இரண்டு நாட்களில் அந்த நபரை கண்டுபிடித்த போலீஸார் அபர்ணா நாயருக்கு தகவல் கொடுத்து சைபர் க்ரைம் பிரிவுக்கு வருமாறு கூறினர்.. தன்னை பற்றி மோசமான கமெண்ட்டை பதிவிட்ட அந்த நபரை நேரில் பார்த்ததும் கோபமான அபர்ணா, எதனால் இப்படி மோசமான வார்த்தைகளில் கமென்ட் செய்தாய் என கேட்டுள்ளார்.
அவனுடைய பதிலில் அவர் சமாதனம் ஆகாவிட்டாலும், அவனுடைய குடும்ப பின்னணி, ஏழ்மை காரணமாக அவனை கடுமையாக எச்சரித்து, போலீஸில் அவன் மீது தான் கொடுத்திருந்த புகாரை வாபஸ் வாங்கிக் கொண்டார் அபர்ணா நாயர்.
அதுமட்டுமல்ல, இனி எந்த ஒரு பெண்ணிடமும் இதுபோல ஆபாச வார்த்தைகளை பிரயோகிக்க கூடாது என்றும் அவனிடம் எழுதி வாங்கிக்கொண்டார். அபர்ணா நாயரின் இந்த அதிரடியான செயல் மலையாள திரையுலகிலும் ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.
தன்னை ஆபாசமாக விமர்சித்த நபர் - நேரில் சென்று கண்டித்த பிரபல நடிகை..!
Reviewed by Tamizhakam
on
June 20, 2020
Rating:
