முன்னணி நடிகரின் படத்தில் இணைந்த தொகுப்பாளினி திவ்யதர்ஷினி..!


விக்ரம் வேதா’படத்துக்கு மாதவனின் ஒருவருட அயராத உழைப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ராக்கெட்- தி நம்பி எஃபெக்ட்’. ISRO விஞ்ஞானி நம்பி நாராயணனின் உண்மைக் கதையான இதில் நம்பியின் 27 வயது முதல் 75 வயது வரையிலான தோற்றங்களில் வருகிறார் மாதவன்.

இதில் சிறிதும் கவனம் சிதறக்கூடாது என்பதற்காக சுமார் ஒரு ஆண்டு காலம் இடையில் வேறு படங்களுக்கு கதை கூட கேட்காமல் இருந்திருக்கிறார் மாதவன். அக்ஸர் மற்றும் தில் மாங்கே மோர் போன்ற படங்களை இயக்கிய தேசிய விருது பெற்றுள்ள ஆனந்த மஹாதேவன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

1994-ம் ஆண்டு உளவுத் துறையால் குற்றம்சாட்டப்பட்டு கைதான நம்பி நாராயணன், 1996ஆம் ஆண்டு அக்குற்றச்சாட்டை சிபிஐ தள்ளுபடி செய்கிறது. உச்ச நீதிமன்றமும் இவ்வழக்கை 1998ஆம் ஆண்டு இவர் குற்றவாளி இல்லை எனக் கண்டறிந்து 50 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிடுகிறது.

இது தான் படத்தின் முழுக்கதை. இந்த படத்தில் நடிகை சிம்ரன் மாதவனுக்கு ஜோடியாக நடிக்கிறார். தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகருமான ஜகன் விஞ்ஞானியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் முக்கால் வாசி காட்சிகள் பல்கேரியாவில் படமாக்கப்பட்டது.


இந்நிலையில், இந்த படத்தில் கூடுதலாக தொகுப்பாளினியும், சமீப காலத்தில் திரைப்படங்களில் நடித்து வருபவருமான திவ்யதர்ஷினி (aka) DD முக்கியமான கதாபத்திரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

முன்னணி நடிகரின் படத்தில் இணைந்த தொகுப்பாளினி திவ்யதர்ஷினி..! முன்னணி நடிகரின் படத்தில் இணைந்த தொகுப்பாளினி திவ்யதர்ஷினி..! Reviewed by Tamizhakam on June 01, 2020 Rating: 5
Powered by Blogger.