முதன் முறையாக பிகினி உடையில் நடிகை லக்ஷ்மி மேனன் - வாயை பிளந்த ரசிகர்கள்..!


சசிகுமார் நடிப்பில் வந்த சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை லட்சுமி மேனன். அறிமுகப் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதும் கிடைத்தது.

இப்படத்தைத் தொடர்ந்து ஒரே ஆண்டில் 3 முதல் 4 படங்கள் வரை நடிக்கும் அளவுக்கு படு பிசியான நடிகையாக உருவெடுத்தார். அத்தனையும் குடும்ப பாங்கான கதையை மையமாக வைத்து உருவான படங்கள்.

கவர்ச்சி காட்டுவதை அறவே தவிர்த்து வந்த அம்மணி அடுத்தடுத்த படங்களில் மெதுவாக கவர்ச்சி பக்கம் திரும்பினார். கொம்பன் படத்தில் காய்ச்சல் விட்டுப்போச்சு என்ற பாடலில் புடவை சகிதமாக இருந்தாலும் ஹாட்டான காட்சிகளில் நடித்து இளசுகளின் காயச்சலை கிளப்பி விட்டார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு படிப்பு தான் இப்போதைக்கு முக்கியம் என படிப்பை தொடர சென்று விட்ட அம்மணி. இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்கலாம் என்ற ஆசையில் இருக்கிறாராம். இடையில், இவருக்கு திருமணம் என்று கூட செய்திகள் வந்தன.

ஆனால், அவை உண்மை கிடையாது என்பது இவரது சமீபத்திய பேட்டி ஒன்றின் மூலம் தெரிந்து கொள்ள முடிகின்றது. மலையாள ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள லக்ஷ்மி மேனன் "கிளாமராக நடிக்க எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. பிகினி உடையிலும் நடிக்க நான் ரெடியாக இருக்கிறேன். நான் நீச்சல் கற்றுக்கொண்ட போது ஸ்விம்சூட் அணிந்து தான் நீச்சல் கற்றுக்கொண்டேன். அப்படியிருக்கும் போது பிகினி உடையில் வலம் வர எனக்கும் ஒன்றும் பிரச்சனை இல்லை" என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த அதிரடி முடிவு லட்சுமி மேனனின் ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர். ஒருபுறம் குடும்ப பாங்கான கதைகளில் நடித்து வந்த இவரை பார்த்த ரசிகர்கள் இனி பிகினி உடையில் பார்க்கப்போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதன் முறையாக பிகினி உடையில் நடிகை லக்ஷ்மி மேனன் - வாயை பிளந்த ரசிகர்கள்..! முதன் முறையாக பிகினி உடையில் நடிகை லக்ஷ்மி மேனன் - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 30, 2020 Rating: 5
Powered by Blogger.