நாயடி, பேயடி கொடுத்த "பொன் மகள் வந்தாள்" - சூர்யாவிடம் பணத்தை திருப்பி கேட்கும் அமேசான் நிறுவனம்..?
கிராமத்து பக்கம் யாரவது ஆழம் தெரியாமல் காலை விட்டு எக்குதப்பாக வாங்கி கட்டிக்கொண்டால் நாயடி, பேயடி வாங்கிட்டான் என்பார்கள். அதை தான் இப்போது அமேசான் நிறுவனம் சந்தித்துள்ளது.
சமீபத்தில், பொன்மகள் வந்தாள் படத்தை ரிலீஸ் செய்கிறேன் என்று வாங்கி ரிலீசும் செய்து நாயடி, பேயடி வாங்கியுள்ளது அமேசான் நிறுவனம். சொல்லப்போனால் படத்தின் ப்ரமோஷனுக்கு செலவான பணத்தை கூட எடுக்க முடியாமல் திணறி வருகிறதாம் அமேசான் நிறுவனம்.
இந்த படம் வெளியானது என்னவே மே 29 தேதி தான். ஆனால், இந்திய நேரப்படி 28-ம் தேதி இரவு சுமார் 10.30 மணி அளவில் பைரசி இணையதளமான தமிழ் ராக்கர்ஸ் 'பொன்மகள் வந்தாள்' படத்தின் '4K' பிரின்ட்டையே வெளியிட்டது. அதாவது, அமேசான் வெளியிடுவதற்கு முன்பாகவே வெளியிட்டுவிட்டது.
அதனால், வேறு வழியில்லாமல் அமேசான் தளமும் 12 மணிக்கு முன்பாக தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்ட அடுத்த சில நிமிடங்களில் ஒளிபரப்பை துவக்கினார்கள்.
பொதுவாக, தியேட்டர்களில் புதிய படங்கள் வெளியான அன்றுதான் தமிழ் ராக்கர்ஸ் சுமாரான, மிகச் சுமாரான பிரின்ட் தரத்தில் வெளியிடும். ஆனால், உலகில் உள்ள ஓடிடி தளங்களில் ஒரு முன்னணி நிறுவனமாக இருக்கும் அமேசான் முதல் முறையாக ஒரு முன்னணி நடிகையின் படத்தை தியேட்டர்களில் வெளியிடுவதற்கு முன்பாக வெளியிடுவதற்கு முன்பாக தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டு மிகப் பெரும் பேரதிர்ச்சியை அந்நிறுவனத்திற்குக் கொடுத்துள்ளது.
இது நாள் வரையில் தயாரிப்பாளர்கள் எவ்வளவோ முயன்றும் தமிழ் ராக்கர்ஸில் படம் வெளியாவதைத் தடுக்க முடியவில்லை. ஆனால், தங்கள் வசம் மிகப் பெரும் தொழில்நுட்ப வசதி, வல்லுனர்களைக் கொண்ட அமேசான் நிறுவனத்தாலேயே இந்த 'பைரசி' திருட்டைத் தடுக்க முடியாதது அவர்களுக்கு பெரும் தோல்வி என்றுதான் திரையுலகில் கருகிறார்கள்.
இதனால், மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது அமேசான் நிறுவனம். இதனை தொடர்ந்து, சூர்யாவிடம் பணத்தை திருப்பி கேட்டு வருவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், இது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
நாயடி, பேயடி கொடுத்த "பொன் மகள் வந்தாள்" - சூர்யாவிடம் பணத்தை திருப்பி கேட்கும் அமேசான் நிறுவனம்..?
Reviewed by Tamizhakam
on
June 05, 2020
Rating:
