"ஹே.., ஐ வாண்ட் ஏர் கண்டிஷனர்" - டிக் டாக் ரவுடி பேபி சூர்யா ரகளை - மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார்..!


டிக் டாக் ஆப் மூலம் பிரபலமான ரவுடி பேபி சூர்யா மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் சென்று இருந்த ரவுடி பேபி சூர்யா, கடந்த 16-ம் தேதி திருப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார்.

அவருக்கு கொரோனா பரிசோதனை செய்த அதிகாரிகள், தனிமைப்படுத்தப்பட்ட வீடு என நோட்டீசும் வீட்டில் ஒட்டினர். அப்போது அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

போலீசாரிடம் "இங்க பாருங்க.. நான் சிங்கப்பூரில் ஏசி ரூம்லேயே இருந்து விட்டேன்.. தமிழ்நாட்டு வெயிலில் இவங்க கிட்ட இருந்து எனக்கு கொரோனா பரவி விடுமோன்னு பயமா இருக்கு. அதனால அரசு ஆஸ்பத்திரியில் தனி ரூம் எனக்கு வேணும்.தனி சாப்பாடு வேண்டும்.

அங்கே நான் ப்ரீயா பாத்ரூம் கூட போக முடியாது. என்னை நிம்மதியாவும் ரசிகர்கள் இருக்க விட மாட்டாங்க.அப்படி நீங்க தனி ரூம் தரலேன்னா என்றால் பிரச்சினை செய்வேன் என்று தெரிவித்துள்ளார். அடம் பிடித்த ரவுடி சூர்யா இறுதியாக ஆம்புலன்சில் ஏற்றி திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த டெஸ்ட்டுக்கு சூர்யாவை அழைத்து வந்தனர்.

இது தொடர்பாக செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் குறித்து அவதூறு பரப்பும் விதமாகவும், கொலை மிரட்டல் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இது தொடர்பான புகாரின் பேரில் சூர்யா மீது வீரபாண்டி போலீசார் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

"ஹே.., ஐ வாண்ட் ஏர் கண்டிஷனர்" - டிக் டாக் ரவுடி பேபி சூர்யா ரகளை - மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார்..! "ஹே.., ஐ வாண்ட் ஏர் கண்டிஷனர்" - டிக் டாக் ரவுடி பேபி சூர்யா ரகளை - மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார்..! Reviewed by Tamizhakam on June 20, 2020 Rating: 5
Powered by Blogger.