திருமணத்திற்கு முன்பே குழந்தை - ரசிகர்களை ஷாக் ஆக்கிய ஸ்ரீ தேவி மகள் ஜான்வி கபூர்..!


தயாரிப்பாளர் போனி கபூர் - மறைந்த நடிகை ஸ்ரீதேவி தம்பதியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் பிஸியான நடிகையாக உள்ளார். அவரது தமிழ் எண்ட்ரியை எதிர்பார்த்து காத்திருக்கிறது கோலிவுட்.

அஜித்தின் வலிமை படத்தில் அது நடக்கக்கூடும் என தெரிகிறது. இந்நிலையில் விளையாட்டாக ஜான்வி பதிவிட்ட இன்ஸ்டா பதிவு ஒன்று, அவரை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.

சமீபத்திய தனது பதிவில், ஒரு குழந்தை உங்களை பார்க்கிறது எனும் தலைப்புடன் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார் ஜான்வி. இதைப்பார்த்த அவரது தோழியும், பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷியின் மகளுமான தான்ஷி, "இதில் யாரு குழந்தை? உனக்கு குழந்தை வேண்டுமா?, என நக்கலாக கேட்டார்.

அதற்கு ஜான்வியும் விளையாட்டாக "ஆம் எனக்கு குழந்தை வேண்டும்" என பதிலளித்தார். ஜான்வியின் இந்த பதிலை நெட்டிசன்கள் பல்வேறு விதமாக திரித்து, திருமணத்திற்கு முன்பே ஜான்வி குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார் என விமர்சித்து வருகின்றனர்.

திருமணத்திற்கு முன்பே குழந்தை - ரசிகர்களை ஷாக் ஆக்கிய ஸ்ரீ தேவி மகள் ஜான்வி கபூர்..! திருமணத்திற்கு முன்பே குழந்தை - ரசிகர்களை ஷாக் ஆக்கிய ஸ்ரீ தேவி மகள் ஜான்வி கபூர்..! Reviewed by Tamizhakam on June 08, 2020 Rating: 5
Powered by Blogger.