"விமானத்தில் நான் தூங்கி கண் விழித்த போது ஒரு நபர் தன்னுடைய...." - மோசமான அனுபவத்தை பகிர்ந்து கொண்ட ராதிகா ஆப்தே..!


பிரபல நடிகை ராதிகா ஆப்தே, குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார். தி ஸ்லீப்வாக்கர்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள குறும்படத்தில் சஹானா கோஸ்வாமி, குல்ஷன் போன்றோர் நடித்துள்ளார்கள். என்னுடைய குறும்படம், பாம் ஸ்பிரிங்ஸ் சர்வதேச குறும்பட விழாவுக்குத் தேர்வாகியுள்ளது.

சிறந்த குறும்படத்துக்கான போட்டியில் உள்ளோம் எனச் சமீபத்தில் கூறினார் ராதிகா ஆப்தே. இவருடைய கணவர் பெனிடிக்ட் டெய்லர், குறும்படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் பாம் ஸ்பிரிங்ஸ் சர்வதேச குறும்பட விழாவில் சிறந்த மிட்நைட் குறும்படத்துக்கான விருதை தி ஸ்லீப்வாக்கர்ஸ் பெற்றுள்ளதாக ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

இவர், லண்டனைச் சேர்ந்த பெனடிக்ட் டெய்லர் என்பவரைக் காதலித்து கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக இப்போது லண்டனில் இருக்கிறார்.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து லண்டனில் வசித்து வருகிறார்.தனது லண்டன் அனுபவம் பற்றி கூறிய அவர், 'லாக்டவுன் காரணமாக மக்கள் வெப்சீரிஸ்களை அதிகம் பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள் என நினைக்கிறேன். லண்டன் தெருக்களில் நான் நடந்து சென்றால் என்னை அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.

என்னைப் பார்ப்பதற்காகக் காத்திருக்கிறார்கள். இதற்கு முன் லண்டன் வந்தபோது, இப்படி யாரும் என்னை உற்றுக் கவனித்ததில்லை.ஆனால், இப்போது கவனிக்கிறார்கள்.  ரசிகர்கள் என்னை நேரில் சந்திக்கும் போது என்னையும், என் படங்களையும் பாராட்டும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

ஆனால், ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது எனது பெயரை சத்தம் போட்டு அழைப்பது. ரோட்டில் நின்ற படியே கத்துவது எல்லாம் எனக்கு பிடிக்கவில்லை. ஒரு முறை விமானத்தில் பயணம் செய்யும் போது ரசிகர் ஒருவர் என்னுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

நான், மிகவும் களைப்பாக இருக்கிறேன் என்று மறுத்து விட்டேன். பிறகு, சிறிது நேரம் தூங்கி எழுந்தேன். கண் விழித்து பார்க்கும் போது அதே ரசிகர் தன்னுடைய கைப்பேசியை என் முன்பு நீட்டியபடி நின்றார்.

இப்படியான விஷயங்கள் எல்லாம் எனக்கு கடும் கோபத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால், அதற்கு ரியாக்ட் செய்தால் தவறாக போய்விடும். ரசிகர்களும் மிகவும் மனம் நொந்து போய் விடுவார்கள் என்று கூறியுள்ளார்.

"விமானத்தில் நான் தூங்கி கண் விழித்த போது ஒரு நபர் தன்னுடைய...." - மோசமான அனுபவத்தை பகிர்ந்து கொண்ட ராதிகா ஆப்தே..! "விமானத்தில் நான் தூங்கி கண் விழித்த போது ஒரு நபர் தன்னுடைய...." - மோசமான அனுபவத்தை பகிர்ந்து கொண்ட ராதிகா ஆப்தே..! Reviewed by Tamizhakam on June 23, 2020 Rating: 5
Powered by Blogger.