சமுத்திரகனியின் கொடூர முகத்தை காட்டும் "கப்சா"


தமிழில் கருத்து கந்தசாமி என பெயரெடுத்த சமுத்திரகனி தெலுங்கில் கொடூர வில்லனாக சமீபகாலமாக நடித்து வருகிறார். இதற்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் RRR படம் தான்.

அதன்பிறகு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அலா வைகுந்தபுராமுலு படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி பட்டையை கிளப்பியது.

தற்போது மீண்டும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சமுத்திரக்கனி. கன்னட நடிகர் உபேந்திரா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "கப்சா". இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் பெங்காலி ஹிந்தி உருது போன்ற ஏழு மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் கொடூர வில்லனாக சமுத்திரக்கனி நடிக்க இருக்கிறார். தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் பிரபல நடிகராக முன்னேறி வருகிறார் சமுத்திரக்கனி.

"கப்சா" படம் கே ஜி எஃப் படத்தைப் போன்று பிரமாண்டமாக உருவாக வருகிறது. தமிழில் சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

சமுத்திரகனியின் கொடூர முகத்தை காட்டும் "கப்சா" சமுத்திரகனியின் கொடூர முகத்தை காட்டும் "கப்சா" Reviewed by Tamizhakam on June 18, 2020 Rating: 5
Powered by Blogger.