தோணி பட ஹீரோ தற்கொலை - இவரது சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா..? - வேதனையில் ரசிகர்கள்..!


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி கேரக்டரில் நடித்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் இன்று(14th June 2020) அவரது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் பாலிவுட் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் MS Dhoni, The untold story’. இந்த படம் கிரிக்கெட் தெரியாத நாடுகளில் கூட சூப்பர்ஹிட் ஆனது.

அதற்கு முக்கிய காரணம் தோனியின் கேரக்டரில் மிக இயல்பாக சுசாந்த் சிங் ராஜ்புத் நடித்ததுதான் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் சற்றுமுன் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

சுசாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை அவரது ரசிகர்களுக்கு பேரிடியாக உள்ளது. பாலிவுட் திரையுலகினர் பலர் அவரது மறைவிற்கு தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

34 வயதே ஆகும் இவர் கடந்த ஒரு வாரமாகவே கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளார் என்று அவருடைய கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தெரிகின்றது. 68 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்ட இவர் கடந்த இரண்டு மாதமாக புதிதாக எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வந்துள்ளார்.

கொரோனா ஊரடங்கிலும் படங்களில் நடிகர், நடிகைகள் ஒப்பந்தம் நடந்து கொண்டு தான் இருந்தது. ஆனால், இவர் வேண்டுமென்றே பட வாய்ப்புகள் தவிர்த்து வந்துள்ளார் என்று பாலிவுட் ஊடகங்கள் கூறுகின்றன.

இந்த இளம் வயதில் அப்படி என்னதான் அவருக்கு பிரச்சனையோ என்று அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை என்பது இந்த அறிக்கையின் மூலம் தெரிகிறது. இருப்பினும் அவரது மொபைல் போன் மற்றும் லேப்டாப்பில் ஏதேனும் ஆதாரங்கள் இருக்குமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

தோணி பட ஹீரோ தற்கொலை - இவரது சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா..? - வேதனையில் ரசிகர்கள்..! தோணி பட ஹீரோ தற்கொலை - இவரது சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா..? - வேதனையில் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 14, 2020 Rating: 5
Powered by Blogger.