சூர்யகிரகணம் - உலகை உலுக்கும் வகையில் நிகழப்போகும் மிகப்பெரிய மரணம்..! - ஜோதிடர் பாலாஜி ஹாசன் பகீர் கணிப்பு..! - அதிர்ச்சி தகவல்..!


அடுத்தடுத்து நாட்டில் நிகழவிருக்கும் பல்வேறு நிகழ்வுகளை கணித்து வருபவர் சேலத்தை சேர்ந்த இளைஞர் பாலாஜி ஹாசன். இதுவரை கணித்த பல்வேறு விஷயங்கள் உண்மையாகி வருகிறது. இதனால், சிறு வயதிலயே கவனிக்கபடக்கூடிய ஜோதிடர்களில் ஒருவராக மாறி வருகிறார் பாலாஜி ஹாசன்.

அண்மையில் நடைபெற்ற உலககோப்பை கிரிக்கெட் பற்றி அவர் கணித்த கணிப்புகளும் தமிழகத்தின் அரசியல் நிலவரம் மற்றும் திரை உலகம் குறித்த கணிப்புகளும் தற்போதைய தமிழக சூழலில் நிஜத்தில் நடந்து வருகிறது.

அரசியல் கட்சிகள் குறித்து பாலாஜி ஹாசன் வெளியிட்டுள்ள பல்வேறு கருத்துக்கள் தற்போதைய அரசியல் களத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக வாய்ப்பே இல்லை என்றும் அ.ம.மு.க எழுந்து வரும் நேரமிருக்கிறது என்றும் கணித்திருந்தார்.

மேலும், தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி இன்னும் பத்து ஆண்டுகளில் நல்ல எண்ணிக்கையிலான இடங்களை பிடிக்கும் என்றும் தமிழக பாரதிய ஜனதாவின் அடுத்த தலைவர் யார் என்பதையும் மிகச்சரியாக கணித்து குறிப்பிட்டு இருந்தார்.

கொரோனா வைரசின் வருகையை கூட கடந்த வருடம் ஆகஸ்ட் மாதமே துல்லியமான கணித்தவர் இந்த பாலாஜி ஹாசன். இப்படி எப்போதும் பரபரப்பாக இருக்கும் இவர் தற்போது பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்று ஞாயிற்றுகிழமை (21th June 2020) ஏற்படும் சூர்யகிரகணம் காரணமாக அரசியல் தலைவர் அல்லது உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரி மரணமடைவார் என்றும், அந்த மரணம் உலகம் முழுக்க பேசப்படும் என்றும் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், " உலகியல் ஜோதிடத்தில் சூரியனை குறிக்கும் கிரகம், அரசன் , அரசாங்கம், மிகவும் புகழ்பெற்றவர் உயர் பொறுப்பில் இருந்த அரசியல்வாதிகள், கலை எழுத்துத் துறையில் பிரபலமானவர்கள், காவல் துறை மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளுக்கு ஆபத்து . ராகு விபத்து காரகன் , மரண காரகன், இவ்விரண்டு கிரகங்களும் அடுத்த நான்கு நாட்களில் மிக நெருங்கிய பாகையில் வருகிறது, அதுவே சூரிய கிரகணமும் ஆகும் இந்த காலகட்டத்தில் உயர்ந்த பொறுப்பில் இருந்த அரசியல்வாதிகள் உயர் பொறுப்பில் வகிக்கும் அரசு அதிகாரிகள் மிகவும் பிரபலம் அடைந்தவர்களுக்கு ஆபத்துகள் ஏற்படலாம். இன்னும் ஐந்து தினங்களுக்குள் ஒரு மிகப்பெரிய மரணத்தைப் பற்றிய பேச்சு உலகம் முழுவதும் இருக்கும்." என்று கூறியுள்ளார்.

இது உலகத்திற்க்கான பலனா..? அல்லது இந்தியாவுக்கான பலனா..? என்று கேட்டதற்கு , இந்தியா மற்றும் தமிழ்நாட்டுக்கு என்று கூறியுள்ளார். இதனால், பலரும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

சூர்யகிரகணம் - உலகை உலுக்கும் வகையில் நிகழப்போகும் மிகப்பெரிய மரணம்..! - ஜோதிடர் பாலாஜி ஹாசன் பகீர் கணிப்பு..! - அதிர்ச்சி தகவல்..! சூர்யகிரகணம் - உலகை உலுக்கும் வகையில் நிகழப்போகும் மிகப்பெரிய மரணம்..! - ஜோதிடர் பாலாஜி ஹாசன் பகீர் கணிப்பு..! - அதிர்ச்சி தகவல்..! Reviewed by Tamizhakam on June 20, 2020 Rating: 5
Powered by Blogger.