வெளியான நாளன்றே HD தரத்தில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான "பென்குயின்"..! - அதிர்ச்சியில் படக்குழு..!


கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் 'பென்குயின்'. ஹீரோயினுக்கு கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண்.

இந்த படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், லிங்கா உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படம் ஒடிடி பிளாட்பாரத்தில் இன்று ஜீன் மாதம் 19ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது.

சமீபத்தில் இந்த படத்தின் டீசரை தென்னிந்திய சினிமாயுலகில் பிரபல நடிகைகளாக வலம் வரும் திரிஷா, சமந்தா, மஞ்சு வாரியர் மற்றும் டாப்சி அவர்களாலும், இந்த படத்தின் டிரைலரை தனுஷ், மோகன்லால், நானி ஆகிய முன்னணி நடிகர்களாலும் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

படம் வெளியான நாளான இன்றே தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் HD தரத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கவனே, பொன்மகள் வந்தால் திரைப்படமும் இதே போல ரிலீஸ் ஆன நாள் அன்றே இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

வெளியான நாளன்றே HD தரத்தில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான "பென்குயின்"..! - அதிர்ச்சியில் படக்குழு..! வெளியான நாளன்றே HD தரத்தில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான "பென்குயின்"..! - அதிர்ச்சியில் படக்குழு..! Reviewed by Tamizhakam on June 18, 2020 Rating: 5
Powered by Blogger.