தல vs தளபதி - டாப் 5 பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் - யார் முதலிடம்..?


தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இரு நடிகர்கள் என்றால் அது நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் தான். தளபதி விஜய் மற்றும் தல அஜித் இருவரையும் தமிழ் சினிமாவின் இருதுருவங்கள் என்று கூறலாம்.

இவர்கள் இருவரும் தான் தற்போது மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள முன்னணி நடிகர்களின் மிகவும் முக்கியமானவர்கள்.

அந்த வகையில் இவர்கள் இதுவரை நடித்து படங்களில் பாக்ஸ் ஆபிசில் அதிகள் வசூல் சாதனையை படைத்துள்ள டாப் 5 படங்களை வைத்து இதில் யார் நம்பர் 1 என்று பார்ப்போம்.

விஜய் :

1. பிகில் = 300 கோடி

2. சர்கார் = 260 கோடி

3. மெர்சல் = 250 கோடி

4. தெறி = 150 கோடி

5. கத்தி = 127 கோடி

அஜித்:

1. விஸ்வாசம் = 187 கோடி

2. விவேகம் = 127 கோடி

3. வேதாளம் = 117 கோடி

4. நேர்கொண்ட பார்வை = 107 கோடி

5. ஆரம்பம் = 95 கோடி

இந்த பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் விபரங்களை வைத்து பார்க்கும் பொழுது பாக்ஸ் ஆபிஸ் பொறுத்தவரை தளபதி விஜய் தான் முதலிடத்தில் இருக்கிறார் என தெரிகிறது.

இது பாக்ஸ் ஆபிஸ் வசூலை மட்டுமே மையப்படுத்தி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிகில் 300 கோடி வசூலித்திருந்தாலும் படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் லாபம் குறைவாக வந்தது. ஆனால், விஸ்வாசம் குறைந்த பட்ஜெட் படம் என்றாலும் 187 கோடி வசூல் செய்து மிகவும் லாபகரமான படமாக இருக்கிறது.

தல vs தளபதி - டாப் 5 பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் - யார் முதலிடம்..? தல vs தளபதி - டாப் 5 பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் - யார் முதலிடம்..? Reviewed by Tamizhakam on June 19, 2020 Rating: 5
Powered by Blogger.