இளம் நடிகையின் கட்டுப்பாட்டில் பிரபல நடிகர் - லாக்டவுனிலும் தொடரும் திருட்டு அடி..!
சினிமாவில் காதல் கசமுசா என்பதெல்லாம் சகஜம்தான். திருமணமான பிறகும் சில நடிகர், நடிகைகள் அந்த மாதிரி உறவுகளுடன் இருப்பது இன்று நேற்று நடப்பது அல்ல. இது திரைத்துறைக்கு புதிதும் அல்ல.
அப்படி ஒரு திருட்டு அடி தான் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நாயகனாக வலம் வருபவர் அந்த நடிப்பு நாயகன். எப்படியோ சுமாரான கூட்டணி வைத்துக்கொண்டு அவ்வப்போது ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார்.
அப்படி ஒரு படத்தில் நடிக்கும் போதுதான் ஒரு நடிகையுடன் மிகவும் நெருங்கிய உறவில் காதல் ஏற்பட்டு விட்டதாம். ஒருகட்டத்தில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்யும் நிலைமைக்கு வந்தார்களாம். இத்தனைக்கும் அந்த நடிகருக்கு காதல் திருமணமாகி இடுப்புக்கு மேலே வளர்ந்த குழந்தைகள் இருக்கிறார்கள்.
இது அவரது வீட்டுக்கு தெரிய தாய்குலம் சாமியாட்டம் ஆடி வீட்டோடு அடக்கி வைத்தாராம். இருந்தாலும் இருவரும் போனில் குடும்பமே நடத்திக் கொண்டிருக்கிறார்களாம். அதுமட்டுமில்லாமல் ஊரே இந்த லாக்டவுன் சமயத்தில் கவலையில் உள்ள நிலையில் இருவரும் செம குஷியில் இருக்கிறார்களாம்.
மேற்கொண்டு இந்த லாக்டவுன் அவர்களுக்கு இன்னும் நெருக்கத்தை அதிகப்படுத்தி உள்ளதாம். இதனால் லாக்டவுன் முடிவதற்குள் இருவரும் இன்னொரு குடும்பத்தை உருவாக்கிவிட வாய்ப்பு இருக்கிறது எனவும் அவர்களது குடும்பத்தினர் பயந்து வருகின்றனர்.
அந்த அளவுக்கு நடிப்பின் நாயகனை தன்னுடைய கண்ட்ரோலுக்கு கொண்டு வந்து விட்டாராம் அந்த நாயகி. நடிகருக்கு கொஞ்சம் வயது அதிகமாக இருந்தாலும் அந்த நாயகிக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். எவன் குடி கெட்டா எனக்கென்ன என சுயநலமாக யோசித்து வருகிறாராம் அந்த தக்காளி நாயகி.
இளம் நடிகையின் கட்டுப்பாட்டில் பிரபல நடிகர் - லாக்டவுனிலும் தொடரும் திருட்டு அடி..!
Reviewed by Tamizhakam
on
July 11, 2020
Rating:
