அடையாளம் கொடுத்த ரஜினிகாந்த் - வேலையை காட்டிய பா.ரஞ்சித் - ஆணவத்துல இப்படியுமா..?


ரஜினியின் சினிமா வரலாற்றிலேயே நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்களே வெறுக்கும் அளவுக்கு ரஜினிகாந்தை வைத்து படத்தை இயக்கியவர் என்றால் அது பா.ரஞ்சித் தான். என்னதான் கபாலி, காலா படம் எல்லாம் சூப்பர் ஹிட் பயங்கர ஹிட் என்று சொன்னாலும் பொதுவான மக்களிடம், ரஜினி ரசிகர்களிடமும் அதற்கான வாய்ப்புகள் குறைவுதான்.

ஆனால், கபாலி, காலா இரண்டு படங்களும் ஒரு கருத்தை வலியுத்தியது. அடித்தட்டு மக்களின் குரலாக அந்த படங்கள் இருந்தன. அந்த வகையில், கபாலி படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டதை கொண்டாடும் வகையில் ரஜினி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வந்தனர்.

ஆனால், படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் அது சம்பந்தமாக எந்த ஒரு பதிவும் தெரிவிக்கவில்லை. அதற்கு காரணம் சில தினங்களுக்கு முன் ரஜினிகாந்த் இந்து மதத்தை இழிவு படுத்தும் கறுப்பர் கூட்டத்தை எச்சரித்து அவர்கள் ஒழிக்கப்பட வேண்டும்.. ஒழியணும் என்று காட்டமான ஒரு பதிவை பதிவிட்டு இருந்தார்.

கறுப்பர் கூட்டத்திற்கு பின்னால் இருந்து வேலை செய்பவர்களில் பா.ரஞ்சித்தும் ஒருவர் என்ற கருத்துக்கள் பரவலாக இருந்து கொண்டிருக்கின்றன.  என்றாலும் அரசியல் கருத்துக்களை சம்பந்தமே இல்லாமல் பேசி பல இடங்களில் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார் பா.ரஞ்சித்.

சமீபத்தில்கூட ராஜராஜ சோழன் ஆட்சி குறித்து அவதூறாகவும், தவறாகவும் பேசி மாட்டிக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எங்கேயோ இருந்தவரை கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்த ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தை வாழ்த்த மறக்கும் அளவுக்கு சாதி அவரைக் கட்டிப் போட்டு விட்டதா. பின் சாதியை ஒழிப்போம்.. சாதி வெறியை ஒழிப்போம் என்று வாய் கிழிய பேசுவதில் என்ன நியாயம் இருக்கிறது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அடையாளம் கொடுத்த ரஜினிகாந்த் - வேலையை காட்டிய பா.ரஞ்சித் - ஆணவத்துல இப்படியுமா..? அடையாளம் கொடுத்த ரஜினிகாந்த் - வேலையை காட்டிய பா.ரஞ்சித் - ஆணவத்துல இப்படியுமா..? Reviewed by Tamizhakam on July 24, 2020 Rating: 5
Powered by Blogger.