"இதய சக்கரத்தை திறந்து இதை செய்யுங்கள்.." - நடிகை தமன்னா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..!
கொரானோ ஊரடங்கு பலரையும் வீட்டுக்குள்ளேயே நான்கு மாதங்களுக்கும் மேலாக முடக்கி வைத்துள்ளது. சினிமா படப்பிடிப்புகள், சினிமா சார்ந்த மற்ற வேலைகள் எதுவும் நடக்கவில்லை.
கடந்த சில மாதங்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த நடிகர்கள், நடிகைகள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் செல்ல ஆரம்பித்துள்ளார்கள்.
நடிகை தமன்னா கொரானோ ஊரடங்கில் தன் மும்பை வீட்டில் பெற்றோருடன் உள்ளார். தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டத்தில் உள்ள அசங்கான் மகுலி காட்டில் மலையேற்றம் சென்றுள்ளார்.
முதுகில் ஒரு பையுடன் காட்டுக்குள் நடந்து செல்லும் பாதையில் அவர் பயணிக்கும் புகைப்படம் சிலவற்றை நேற்று பதிவிட்டு, “இயற்கையில் தொலைந்து போங்கள், உங்களை நீங்களே கண்டுபிடியுங்கள்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று வீட்டில் யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு, இதய சக்கரத்தை திறந்து அளவில்லா அன்பை திறந்து விடுங்கள் அளவில்லா அன்பை உள்ளே அனுமதியுங்கள் என்று கூறியுள்ளார்.
