"கடை திறப்பு விழாவில் ரசிகர் செய்த விஷயம்" - வாழ்க்கை முழுதும் மறக்க முடியாது - மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்..!


நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு அண்மையில் பெண்குயின் என்ற படம் ஓடிடி தளத்தில் வெளியானது. எதிர்பார்ப்புகள் இருந்த போதிலும் இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

கீர்த்தி சுரேஷ் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வந்த அண்ணாத்த படத்திலும் இணைந்திருந்தார். ஆனால் கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக பாதிக்கப்பட்டது. விரைவில் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கிலும் இரண்டு பட வாய்ப்புகளை கைகளில் வைத்திருக்கிறார். இந்நிலையில் அவருக்கு ஒரு முறை நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்றபோது கூட்டத்தில் திடீரென முன்னால் வந்த நபர் ஒருவர் திடீரென அழகான போட்டோ ஆல்பத்தையும் கடிதத்தை கொடுத்திருந்தாராம்.

அதை பிரித்து பார்த்து அதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொண்ட கீர்த்தி அப்படியே அமைதியாக விட்டுவிட்டாராம். அந்த கடிதத்தில், அந்த நபர் "என்னை திருமணம் செய்துகொள்வீர்களா..?" என எழுதியிருந்தாராம்.

யாரென தெரியாத நபர் இப்படியான ஒரு கடிதத்தை கொடுத்த இந்த தருணத்தை வாழ்வின் மறக்க முடியாத நினைவுகளில் வைத்திருக்கிறாராம் கீர்த்தி.

"கடை திறப்பு விழாவில் ரசிகர் செய்த விஷயம்" - வாழ்க்கை முழுதும் மறக்க முடியாது - மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்..! "கடை திறப்பு விழாவில் ரசிகர் செய்த விஷயம்" - வாழ்க்கை முழுதும் மறக்க முடியாது - மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்..! Reviewed by Tamizhakam on July 24, 2020 Rating: 5
Powered by Blogger.