"பாகுபலி" படத்தில் கட்டப்பா கேரக்டரில் நடிக்கவிருந்தவர் இவர் தானாம் - சட்ட சிக்கலால் சத்யராஜிற்கு அடித்த ஜாக்பாட்..!
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில், நடிகர்கள் பிரபாஸ், ராணா டகுபட்டி, நடிகைகள் ரம்யாகிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடித்து 2015ம் ஆண்டு ஜுலை 10ம் தேதி வெளிவந்த படம் 'பாகுபலி'.
படத்தின் முதல் பாகமாக வெளிவந்த இந்தப் படத்தில் ஒரு முக்கிய குணச்சித்திர கதாபாத்திரமான 'கட்டப்பா' கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருப்பார். பாகுபலியை கொன்றது யார்..? என்ற லீடு தான் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பெரிய விளம்பரமாக அமைந்து விட்டது.
இரண்டாம் பாகம் வெளியாகி முதல் காட்சி ஒளிபரப்பாகி முடிந்த போதே கட்டப்பா தான் பாகுபலியை கொன்றது என்ற தெரிந்து விட்டது. ஆனாலும், தியேட்டரில் தான் பார்ப்போம் என்று ரசிகர்கள் படையெடுத்தனர்.
படம் தாறு மாறு ஹிட் அடித்தது. பாகுபலி படத்தில் ஹீரோவுக்கு நிகரான மாஸான கதாபாத்திரம் "கட்டப்பா". இக்கதாபாத்திரத்தில் முதலில் ஹிந்தி நடிகரான சஞ்சய் தத்தை நடிக்க வைக்க வேண்டும் என ராஜமவுலி விரும்பினாராம்.
ஆனால், அப்போது அவர் ஜெயிலில் இருந்த காரணத்தால் சஞ்சய் தத்தை நடிக்க அழைத்து வர முடியாது. அதில், பல்வேறு சட்ட சிக்கல் ஏற்படும் என்பதால் அவருக்குப் பதிலாக சத்யராஜைத் தேர்வு செய்தார்களாம். இந்தத் தகவலை படத்தின் கதையாசிரியரான விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.
முதல் பாகத்தில் 'கட்டப்பா, பாகுபலியை எதற்காக கொன்றார்' என்பதுடன் படம் முடிந்தது. அந்தக் கேள்வியே படத்தையும், கட்டப்பா கதாபாத்திரத்தையும் அதிகமாகப் பிரபலப்படுத்தியது.
கட்டப்பா கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது. சஞ்சய் தத் நடித்திருந்தால் கூட அந்த அளவிற்கு பெயரை வாங்கியிருப்பாரா என்பது சந்தேகம்தான்.
"பாகுபலி" படத்தில் கட்டப்பா கேரக்டரில் நடிக்கவிருந்தவர் இவர் தானாம் - சட்ட சிக்கலால் சத்யராஜிற்கு அடித்த ஜாக்பாட்..!
Reviewed by Tamizhakam
on
July 11, 2020
Rating:
