ப்ப்பா... - இந்த வயசுலயும் இப்படியா..? -நம்பவே முடியல..! - குஷ்பு வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..!


நடிகை குஷ்புவிற்கு கோவில் கட்டியது தமிழ்நாட்டு ரசிகர்கள்தான். இன்றைக்கும் வைரல் பேபியாக வலம் வருகிறார் குஷ்பு. குஷ்புவின் இளமைக்கால படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அதனை ட்விட்டரில் பதிவிட்டவரே குஷ்புதான். குஷ்பு இட்லி, குஷ்பு கோவில், குஷ்பு பெயரில் ஹோட்டல் என்று குஷ்புவுக்கு தனி கோட்டை கட்டியவர்கள் நம் தமிழ் ரசிகர்கள்.

1988ஆம் ஆண்டு முதல் இன்று வரை சினிமா துறையிலும் சரி, தற்போது அரசியலிலும் சரி, ஜொலித்து வருபவர் நடிகை குஷ்பு. 1980ஆம் ஆண்டுகளில் பிறந்தவர்களுக்கு எல்லாம் கனவுக் கன்னியாக இருந்தவர் நடிகை குஷ்பு.

இயக்குனர் சுந்தர்.சி அவர்களை திருமணம் செய்து கொண்டு தமிழ்நாட்டு மருமகளானார். கடந்த 34 ஆண்டுளுக்கும் மேலாக சென்னையில் வசித்து வரும் குஷ்பு அரசியலில் கால்பதித்தார். தொடக்கத்தில் திமுகவில் இருந்தாலும் பின்னர் திமுகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்து விட்டார்.

குஷ்புவை பொருத்தவரையில், தன்னை ஒரு நடிகையாக மட்டும் நினைக்காமல், பெண்களின் நலனில் அக்கறை கொண்டவராகவும் முன்னிறுத்திக் கொள்கிறார். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து முதல் குரல் எழுப்புவர் இவர்தான்.

ஆனால், தமிழ் நாட்டு பெண்களின் கற்பு குறித்து சர்ச்சையாக பேசி தமிழ் மக்களிடம் செருப்படி வாங்கியவரும் இவர் தான் என்பது குறிப்பிடதக்கது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, கொரோனா ஊரடங்கை தன்னுடைய உடல் எடையை குறைக்க பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் குஷ்பு.


அந்த வகையில், தற்போது தன்னுடைய உடலின் நெகிழ்வுதன்மையை பரிசோதிக்கிறேன் என்று கூறி வில் போல வளைந்துகொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களை பதற வைத்துள்ளார்.


இதனை பார்த்த அவரது ரசிகர்கள் இந்த வயசுலயும் இப்படியா..? நம்பவே முடியல..! என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

ப்ப்பா... - இந்த வயசுலயும் இப்படியா..? -நம்பவே முடியல..! - குஷ்பு வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..! ப்ப்பா... - இந்த வயசுலயும் இப்படியா..? -நம்பவே முடியல..! - குஷ்பு வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 28, 2020 Rating: 5
Powered by Blogger.