முதல் மரியாதை படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
சிவாஜி கணேசன் ராதா நடிப்பில் இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கிய திரைப்படம் ’முதல் மரியாதை’. இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் அனைத்து தரப்பினருக்கும் இந்த படம் கவர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பல ஆண்டுகள் கழித்து இந்த படத்தை ரீமேக் செய்யும் திட்டத்தை பாரதிராஜா வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக பாரதிராஜாவுக்கு ரீமேக் செய்யும் பழக்கம் இல்லை என்பதும் ஆனால் இந்த படம் அவரை மிகவும் கவர்ந்த படம் என்பதால் இப்போது உள்ள நடிகர் நடிகைகளை வைத்து ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டு தாகவும் கூறப்படுகிறது.
சிவாஜி நடித்த வேடத்தில் அனேகமாக பிரபு நடிக்கலாம் என்றும் ராதா நடித்த வேடத்தில் நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் இது குறித்து உறுதியான தகவல் பாரதிராஜாவிடமிருந்து இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவாஜி கணேசன் ரசிகர்கள் இது குறித்து கருத்து கூறிய போது முதல் மரியாதை படம் ரீமேக் செய்ய வேண்டிய பணம் இல்லை என்றும் அந்த படம் சிவாஜி கணேசனின் அடையாளங்களில் ஒன்று என்றும் அந்த படத்தை அப்படியே விட்டு விட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மிகப்பெரிய வெற்றியடைந்த முதல் மரியாதை திரைப்படத்தில் நடிகர் திலகம்
சிவாஜி கணேசனுடன் இணைந்து ராதா, வடிவுகரசி, என மிகப் பெரிய திரை பட்டாளமே
நடித்து இருந்தது. ஆற்றில் படகோட்டும் ஒரு சாதாரண பெண்மணி அந்த ஊரில் மிகப்
பெரிய மனிதராக மதிக்கப்படும் அப்பா வயது உள்ள ஒருவரை காதலிக்கிறார் என்ற
மையக் கருவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் மரியாதை பலரையும்
ரசிக்க வைத்து பல பாராட்டுகளைப் பெற்று விருதுகளை வாரிக்குவித்தது.
ஆனால், இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருன்தது சிவாஜி இல்லை என்பது தான் சுவாரஸ்யமே. ஆம், பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் தான். இதனை அவரே ஒரு மேடை நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
இவர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் எக்கச்சக்கமான பாடல்களைப் பாடி
தனது குரலின் மூலம் இந்திய மக்கள் அனைவரையும் வசியம் செய்து வந்தவர் பல
படங்களில் பாடல்களைப் பாடியது மட்டுமல்லாமல் நடித்தும் உள்ளார்.
ஒருவேளை முதல் மரியாதை திரைப்படத்தில் எஸ்.பி பாலசுப்பிரமணியம்
நடித்திருந்தால் இந்நேரம் பாடகராக எவ்வாறு இந்திய அளவில் மிக உயர்ந்து
நிற்கிறரோ அதே போன்று நடிப்பிலும் ஒரு அசைக்க முடியாத நட்சத்திரமாக
இருந்திருப்பார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
முதல் மரியாதை படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Reviewed by Tamizhakam
on
July 22, 2020
Rating:
