வியர்க்க விறுவிறுக்க நடிகை அணுஹாசன் - வைரலாகும் வெறித்தனமான வொர்க்அவுட் புகைப்படங்கள்..!
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த அனுஹாசன், இந்திரா, நள தமயந்தி, ரன், அஞ்சாதே உள்பட பல படங்களில் நடித்தவர். தற்போது லண்டனில் செட்டிலாகியிருக்கும் அவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு வல்லதேசம் என்ற படத்தில் ஆக்சன் ஹீரோயினாக ரீ என்ட்ரியானார்.
நடிகை விஜயசாந்தி நடித்த அதிரடி படங்களைப்போன்று இப்படம் உருவாக்கி வெளியானது. லண்டனை சேர்ந்த தமிழர் ஒருவர்தான் இந்த படத்தை தயாரித்து, இயக்குகியிருந்தார்.
கதாநாயகன் இல்லாத இந்த படத்தில் ராணுவத்தில் இருந்து வரும் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார் நடிகை அனுஹாசன். இதற்காக தனது உடல் எடையை கணிசமான அளவு குறைத்த அணுஹாசன், சண்டை பயிற்சியும் எடுத்து சண்டை காட்சிகளில் கிட்டத்தட்ட விஜயசாந்தி எதிரிகளை பந்தாடினார்.
இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றபோதும், சென்னையிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தது. உலகநாயகன் கமல்ஹாசனின் நெருங்கிய உறவினரான அனுஹாசன் கதாநாயகியாக பல
படங்களிலும், தொலைக்காட்சிகளிலும், மற்றும் பல பிரபலமான நிகழ்ச்சிகளில்
தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.
தொலைக்காட்சி தொடர்களில் மிகவும் பிரபலமான தொடர்களான அன்புள்ள சினேகிதியே
மற்றும் பூம் பூம் ஷக்கலக்க போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம்,
இல்லத்தரசிகள் அனைவருக்கும் பிடித்தமான ஒரு திரை பிரபலமாக வலம் வந்தார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய உடல் நலத்தை பேணுவதில் அதீத கவனம் செலுத்தி உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள ஒரு ஒர்க் அவுட் புகைப்படத்தில் முகம்
முழுவதும் வியர்த்து உடற்பயிற்சி செய்து களைத்துப் போய் உள்ள நிலையில் ஒரு
புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார்.
அதில் " அவர்கள் இது இல்லை என்றால்
அதை செய்ய சொல்வார்கள் நாம் ஏன் இரண்டையும் செய்யக்கூடாது?? ஆனால்
வாழ்க்கை சில நேரங்களில் நமக்கு சொல்லிக் கொடுத்ததை முகத்தில் இருந்து
விழும் வியர்வைத் துளிகளின் மகிமையாக வெளிப்படுத்தி உள்ளேன் என கூறியுள்ளார்.
வியர்க்க விறுவிறுக்க நடிகை அணுஹாசன் - வைரலாகும் வெறித்தனமான வொர்க்அவுட் புகைப்படங்கள்..!
Reviewed by Tamizhakam
on
July 02, 2020
Rating:
