இனிமே நோ ரொமான்ஸ்ன்னு சொன்ன நடிகையா இது..? - எல்லாம் காசு.. பணம்.. துட்டு பண்ணுற வேலைப்பா..!


முன்னாள் முன்னணி நடிகையும் நடிப்பில் ஒட்டுமொத்த திரையுலகையும் கட்டி போட்டவர் இந்த பிரகாசமான நடிகை. தன்னுடன் நடித்த  பிரகாசமான முன்னணி திருமணம் செய்து கொண்டார்.

பிரகாசம் weds பிரகாசம்.. ஆஹா.. என்ன பொருத்தம்.. அட என்ன பொருத்தம்.. என கிடந்து உருகியது கோலிவுட். அந்த உருக்கத்தை எல்லாம் ஏறக்கட்டி வைத்து விட்டு இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று குழந்தை குட்டி என செட்டில் ஆனவர் அம்மணி.

ஆனால், சினிமா மோகம் யாரை விட்டது. ஆ..ஆம்...  குழந்தைகள் எல்லாம் வளர்ந்தாச்சு.. எடு வண்டிய.. என்று பெரும் இடைவெளிக்கு பிறகு நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டும் நடித்து வருகிறார்.

என்றாலும் தற்பொழுதும் நாயகர்களுடன் ரொமான்ஸ் செய்து நெருக்கம் காட்டி நடிக்கும் கதாபாத்திரங்களுக்கும் இயக்குனர்கள் அவரை அணுகி வருகின்றனர். அப்படி காமாண்டர் நடிகர்மூன்று வேடங்களில் நடித்த திரைப்படத்தில், ஒரு கதாபாத்திரத்தின் மனைவியாக கொஞ்சி குலாவும் வேடத்தில் இவரையே நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தது.

ஆனால் கதையை கேட்டு கடுப்பான நடிகை, எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது இனியும் என்னால் நாயகர்களுடன் நெருக்கமாக நடிக்கும் கதாபாத்திரங்களை ஏற்க முடியாது என ஒரே போடாக போட்டார்.

இதனை அடுத்து அக்கடதேச நடிகை ஒருவர் அவர் நடிக்க மறுத்த கதாபாத்திரத்தில் நடித்து அதற்கு விருதுகளையும் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அம்மணி இப்படி கிளாமருக்கு கிடுக்கு பிடி போடுபவர் என்பது தெரியாமல் நம்ம காத்தாடி நடிகை பொண்ணுக்கு மாமனார் ஆன அந்த பக்கத்து ஸ்டேட் ஹீரோ ஒருவர் 50 வயது கொண்ட கதாபாத்திரமாக நடிக்கும் புதிய படத்தில் அம்மணியை ரொமான்ஸ் பண்ணு அப்ரோச் செய்துள்ளார்.

சம்பளமும் கோடிகளில் பேசப்பட்டுள்ளது, இளம் வயதில் நடிகருடன் ஏற்கனவே பல படங்களில் செய்து நடித்துள்ளோம்.. நல்ல நண்பர் என்பதால் பதில் எதுவும் சொல்லமல் லாக்டவுன் முடியட்டும் என்று கூலாக சொல்லியுள்ளாராம்.

நம்ம கமேண்டர் நடிகர் படத்திற்கு லாக் போட்டுவிட்டு.. பக்கத்துக்கு ஸ்டேட் ஹீரோ.. கோடிகளில் சம்பளம் என்றது இப்போது லாக் டவுன் முடியட்டும் என மறைமுகமாக ஓகே சொல்லியுள்ளார் அம்மணி.

* இனிமே நோ ரொமான்ஸ்ன்னு சொன்ன நடிகையா இது..? - எல்லாம் காசு.. பணம்.. துட்டு பண்ணுற வேலைப்பா..!

இனிமே நோ ரொமான்ஸ்ன்னு சொன்ன நடிகையா இது..? - எல்லாம் காசு.. பணம்.. துட்டு பண்ணுற வேலைப்பா..! இனிமே நோ ரொமான்ஸ்ன்னு சொன்ன நடிகையா இது..? - எல்லாம் காசு.. பணம்.. துட்டு பண்ணுற வேலைப்பா..! Reviewed by Tamizhakam on July 05, 2020 Rating: 5
Powered by Blogger.